search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guiness world record"

    • தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள்.
    • அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.

    இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 25,12,585 லட்சம் விளக்குகளை அதிக அளவில் காட்சிப்படுத்தியதன் மூலம் சுற்றுலாத்துறை, உத்தரபிரதேச அரசு, மாவட்ட நிர்வாகம், அயோத்தியில் சாதனை படைத்துள்ளது. 

    இதேபோல், ஒரே நேரத்தில் அதிக மக்கள் விளக்குகளை ஆரத்தி எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம், இம்முறை இரண்டு கின்னஸ் சாதனைகளை உ.பி தீபத்திருவிழா படைத்துள்ளது.

    இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும், லேசர் ஒளி மூலம் ராம் - லீலா நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அரசு சார்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகமும் அலங்காரத்தால் ஜொலிக்கிறது.

    மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக கடந்த 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
    • தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது.

    இதையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் 2017-ம் ஆண்டு 51 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 22.3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் 25 லட்சம் முதல் 28 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. நீண்ட காலத்துக்கு எரியும் வகையிலும், சிறப்பு மெழுகு விளக்குகள் கார்பன் உமிழ்வை குறைக்கவும், கோவிலை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும்.

    மேலும் தீபத்திருவிழாவையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்படும் ராமர் கோவில் வளாகம், அலங்காரத்திற்காக பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    அயோத்தியை மதம் மற்றும் நம்பிக்கையின் மையமாக மட்டுமல்லாமல் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் உணர்வின் அடையாளமாகவும் மாற்றுவதை கோவில் அறக்கட்டளை நோக்கமாக கொண்டுள்ளது.

    மேலும், தீபத்திருவிழாவின் பிரம்மாண்டம் நீடித்த உணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்காக கோவிலின் பவன் தரிசனத்திற்காக வருகிற 29-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி நள்ளிரவு வரை திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார்.

    தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. தற்பொழுது இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    சிரஞ்சீவி இதுவரை 24000 நடன ஸ்டெப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.

    இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். நேற்று இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதே செப்டம்பர் 22 ஆம் தேதி 1978 - வது வருடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    விருதை பெற்ற சிரஞ்சீவி " என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்." என கூறினார்.

    சிரஞ்சீவி தற்பொழுது மல்லிடி இயக்கத்தில் விஸ்வம்பரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது.
    • டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார்.

    அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்தார். இதனையடுத்து, அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

    இந்நிலையில், கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், மூதாட்டி டோரத்தி உயிரிழந்துள்ளார். டோரத்தி, ப்ரூக்டேல் லேக் வியூ மூத்த வாழ்க்கை சமூகத்தில் அவரது படுக்கையிலே இறந்து கிடந்தார் என்று அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவே இறந்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ஸ்கைடைவ் சிகாகோ மற்றும் யுஎஸ் பாராசூட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது. ஸ்கை டைவிங் என்பது நம்மில் பலர் பாதுகாப்பாக நடத்தப்படும் ஒரு செயலாகும். ஆனால், வாழ்நாளின் சிலிர்ப்பைப் பெற இது ஒருபோதும் தாமதமாகாது என்று டோரத்தி நமக்கு நினைவூட்டுகிறார்" என்றார்.

    டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார். இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    ×