என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gunpoint"

    • நகைக்கடைக்குள் காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர்.
    • மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    திருவள்ளூர்:

    ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் கடைக்குள் இருந்த பிரகாஷை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டி போட்டனர்.

    இதையடுத்து துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின் அடிப்படையில் ஆவடி ஆணையரகத்தின் அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக செங்குன்றம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு தனது கூட்டாளியுடன் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சேதுபதியை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் வந்ததை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் சேதுபதியை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சேதுபதியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார்.
    • பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பகுசராய் நகரை சேர்ந்தவர் அவினாஷ். பட்டதாரி ஆன இவர் அந்த மாநிலத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் லகிசராய் நகரை சேர்ந்த குஞ்சம் என்பவர் பகுசராய் நகரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு கல்லூரி படிக்க வந்தார்.

    அப்போது அவினாசை சந்தித்து பழகி வந்தார். நாளடைவில் இது காதலாக மாறியது. சுமார் 4 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அவினாஷ் குஞ்சத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

    இந்தநிலையில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவினாஷிடம் குஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு அவினாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 கார்கள் அவினாசை வழிமறித்தன. பின்னர் அவரை காருக்குள் ஏற்றி கொண்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்றது.

    அங்கே தனது உறவினர்களுடன் மணக்கோலத்தில் இருந்த குஞ்சத்தை பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவினாஷின் கால்களை கயிற்றால் கட்டிய உறவினர்கள் துப்பாக்கி முனையில் குஞ்சத்துடன் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    அப்போது பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர். அருகே இருந்த குஞ்சம் அழுது துடித்தார். சினிமா காட்சிகளை மிஞ்சிய இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்தநிலையில் திருமணம் முடிந்த கையோடு அவினாஷ் வீட்டிற்கு சென்ற குஞ்சத்தை மணமகனின் பெற்றோர் ஏற்க மறுத்து துரத்தி அடித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

    அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமியை நான்குபேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #UPGirlMolested
    டெல்லியில் லிப்ட் கேட்டு காரில் சென்ற ஜிம் பயிற்சியாளரிடம் துப்பாக்கி முனையில் பணத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #YouthRobbed #DelhiGymInstructor
    புதுடெல்லி:

    டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து என்எஸ்ஐசி செல்வதற்காக, 24 வயது ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பேருந்திற்கு காத்திருந்தார். பேருந்து நீண்டநேரம் வராததால், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். காரில் இருந்தவர்கள், அவருக்கு லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்றுள்ளனர்.



    ஆனால், அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், காரை நிறுத்தாமல் டிடியு கல்லூரி நோக்கி சென்றுள்ளனர். அங்கு காரை நிறுத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஜிம் பயிற்சியாளரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பேக் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர் அவரிடம் 20 ரூபாய் மட்டும் கொடுத்து, வீடு போய் சேரும்படி கூறிவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். #YouthRobbed #DelhiGymInstructor

    தலைநகர் டெல்லியில் வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் 35 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ளது மாடல் டவுன் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் தாமிரம் தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், அந்த வியாபாரி நேற்று 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஒரு காரில் சென்றார். அவருடன் டிரைவரும், மேனேஜரும் சென்றனர்.

    அப்போது அவர்களது காரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், காரை வழிமறித்தது. தங்களது கைகளில் இருந்த துப்பாக்கியால் மிரட்டி, அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொள்ளையில் வியாபாரிக்கு நெருக்கமானவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். #Tamilnews
    ×