என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurmeet Ram Rahim Singh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சாச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளார்
    • அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ளார் குர்மீத்

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அரியானா சிறையில் இருந்து வரும் ராம் ரஹீமுக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தேரா சச்சா ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பரோல் கேட்டு குர்மீத் விண்ணப்பித்திருந்தார். அதன்படி 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு இன்று அதிகாலை 6.30 மணியளவில் குர்மீத் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேரா சச்சா ஆசிரமத்தில் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை குர்மீத் ராம் ரஹீம் கொண்டாட உள்ளதாக தெரிகிறது. கடத்த கடந்த 2022 மற்றும் 23ஆம் ஆண்டுகளில் மொத்தமாக 232 நாள்கள் குர்மீத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    2023ஆம் ஆண்டு ஜனவரி மாதமும், பிறகு ஜூலை, நவம்பர், மீண்டும் 2024ஆம் ஆண்டு ஜனவரி என முறையே 40 நாள்கள், 30 நாள்கள், 21 நாள்கள், 50 நாள்கள் பரோலில் குர்மீத் வெளியே வந்தார்

    அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளுர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரியாக ராஜஸ்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 3 வார பரோலில் குர்மீத் வெளியே வந்தார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 40 நாள் பரோலில் குர்மீத் வெளிவந்த நேரம் சரியாக அரியானா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற காலகட்டம் ஆகும்.

    கடந்த 2022 பிப்ரவரியில் 21 நாள் பரோலில் அவர் வெளிவந்த காலகட்டம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த சமயம்., அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியே வந்தது அரியானா உள்ளாட்சித் தேர்தல் சமயம். அதே அக்டோபரில் அரியானா இடைத்தேர்தலின்போது வந்தார். 

    2020 அக்டோபரில் அரியானா சட்டமன்ற தேர்தலின்போது வெளியே வந்தார். தற்போது காஷ்மீர், அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கும் சமயத்தில் வெளியே வந்துள்ளார். 

    • குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது
    • குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை பெறவும் தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளனர்

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மிக நீண்ட உரையினை நேற்றைய தினம் நிகழ்த்தினார். அவரது உரையில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை. குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. மோடியின் உரையைப் பகிர்ந்து அவர், மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை விடுதலையாகி வெளியே உள்ள பாலியல் குற்றவாளிகள் [RAPISTS] தற்போது சிரித்துக் கொண்டுள்ளனர் [Laughing in the corner]. எப்போது நீங்கள் சொல்வதுபோல் நடந்து கொல்லப்போகிறீர்கள்#justasking என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மதத் தலைவர்களான குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை [பெறவும்] தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீம் மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பு கோரி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.

    அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளூர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானா தேர்தல் நடக்க உள்ள நிலையில் ராம் ரஹீமின் பரோல் நீட்டிப்பு கோரிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.

     

    ராம் ரஹீமின் தற்போதைய பரோல் நீட்டிப்பு கோரிக்கை மனுவை ஹரியானா அரசு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ராம் ரஹீமிற்கு அரசியல் உள்நோக்கத்துடன் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதன் பின்னணியில் பாஜக உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் கடும் நிபந்தனைகளுடனேயே பரோல் வழங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

     

    அவரின் 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தனது தண்டனைக்கிடையில் 255 நாட்கள் பரோல் விடுப்பில் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார் சாமியார் ராம் ரஹீம். 

    • இதுவரை மொத்தம் 259 நாட்கள் ராம் ரஹீம் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார்.
    • தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

    அரியானாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 46 இடங்களில் வெற்றி பற்று பாஜக 3 வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தல் சமயத்தில் பாலியல் குற்றவாளி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பரோலில் வெளி வந்தது அரசியல் ரீதியான சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது.

    தேரா சாச்சா ஆசிரமத்தை நடத்தி வந்த மதகுரு ராம் ரஹீம் பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீமுக்கு சரியாக அரியானா தேர்தலை ஒட்டி மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

    கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டது. 4 ஆண்டு சிறை வாசத்தில் இதுவரை மொத்தம் 259 நாட்கள் அவர் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார். அரியானாவில் அதிக சீடர்களையும், பக்தர்களையும் கொண்டுள்ள ராம் ரஹீம் தேர்தல் காலங்களில் மட்டுமே இதுவரை அதிகம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் ராம் ரஹீம் இருக்கும் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சுனில் சங்வான் தற்போது நடந்து முடிந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் சார்கி தாத்ரி [Charkhi Dadri] தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை 1,957 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

     

    தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் தனது ஜெயிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இவர் பாஜகவில் இணைந்தார். இவர் ரோஹ்தக் சிறையில் ஜெயிலராக இருந்த சமயத்திலேயே குர்மீத் ராம் ரஹீமுக்கு அதிகபட்சமாக 6 முறை பாரோல் வழங்கப்பட்டுள்ளது.

    சிறையில் இருப்பவர்களுக்கு நீதிமன்றம் பரோல் வழங்கும் என்றாலும் கைதி நடத்தை உள்ளிட்டவை குறித்து ஜெயிலரிடம் அறிக்கை வாங்கிய அவரின் பரிந்துரைக்கு பின்னரே பரோல் வழங்கும். பரோல் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

    பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
     
    இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

    பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.



    இதற்கிடையே, பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்  ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

    பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்  ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்ற குற்றவாளிகளான குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    மேலும், அவர்கள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    ×