என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gurubagavan"
- இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.
- சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.
மகாமகம் சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான சிவ ஸ்தலம் இது.
மகா பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் சிதைத்தார்.
அப்போது அமுத கலசத்தை தாங்கிக் கொண்டு வந்த "உறி", இந்த இடத்தில் விழுந்து பின்னர் லிங்கமாக மாறிற்று.
உறிக்கு மறு பெயர் சிக்கம். எனவே இந்த சிவலிங்கத்திற்கு முதலில் சிக்கேசர் என்று பெயர் வந்தது.
நவகிரகங்களில் ஒன்றான சந்திரன் தான் செய்த தவறுக்காக குருவான பிரகஸ்பதியின் சாபத்திற்கு உள்ளானான்.
தனது சாபத்தைப் போக்க சிவபெருமான் தான் கருணை காட்ட வேண்டுமென்று எண்ணி இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானான சிக்கேசரை வழிபட்டு வந்தான்.
தினமும் தான் நீராடுவதற்காக இங்குள்ள இறைவன் சன்னதிக்கு வலப்புறத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான் சந்திரன்.
இறைவனும் சந்திரனுடைய வேண்டுகோளை ஏற்று இறைவனும் அவனுக்குத் தரிசனம் தந்தார்.
எனவே இறைவனுக்கு சிக்கேசர் என்ற பெயர் மாறி சோமேஸ்வரர் என்று புதுப் பெயர் வந்தது. அம்பாளுக்கு சோமநாயகி என்று பெயர் உண்டாயிற்று.
வியாழ பகவான் இத்தலத்தை அடைந்து இறைவனை வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் உண்டு.
மகப்பேறு வேண்டும் என்பதற்காக பராந்தக சோழன் இந்த லிங்கத்தை வழிபட்டதால் லிங்கம் சோழீசர் என்று பெயர்க்காரணம் ஏற்பட்டது.
இத்தலத்திலிருக்கும் தேனார் மொழியம்மை இறைவனது திருமேனியை ஆரோகணித்ததால் காரோணம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள இறைவன் திருவடி நர்மதை ஆற்றின் கரையிலிருந்த கற்களால் செதுக்கப்பட்டது என்பது வியக்க வைக்கும் செய்தி.
சம்பந்தர் காரோணம் என்று பதிகம் பாடியது இங்குதான் என்று சொல்லப்படுகிறது.
சந்திரதோஷம், குருதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும்.
மாதவரை விட தூமகேது இங்குள்ள வருண தீர்த்தத்தால் இறைவனுக்கு சதா சர்வ காலமும் பூஜை செய்து வணங்கி வர இறைவனும் தூமகேதுவுக்கு காட்சியளித்தார்.
தூமகேதுவின் வேண்டுகோள்படியே இறைவன் இங்கு நிரந்தரமாக தங்கி தூமகேதுவுக்கு அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள தீர்த்தம் தூமகேது தீர்த்தம் என்று பெயர் பெற்றது.
- தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.
- குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள்.
தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல.
ஆனால் நிறைய பேர் தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.
உண்மையில் தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அது தொடர்பான விவரங்கள் வருமாறு:
தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.
இவர் சிவன், அவர் பிரகஸ்பதி.
தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி, குரு அதிகாரி.
தட்சிணாமூர்த்தி சிவகுரு, குரு தேவகுரு.
தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.
குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.
சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர், குருவோ உதயம் அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு
அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல...
தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.
சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள்.
குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள்.
கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.
குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள்.
இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
என்றாலும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.
குருபகவான் என்பவர் தேவகுரு மட்டும் தானாம்.
ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம்.
அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள்.
சிலர் குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறார்கள். அதுவும் தவறு.
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதையோ பிரம்மதேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.
எனவே தட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒன்றே என நம்மை நாமே குழப்பிக் கொள்ளக்கூடாது.
- இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
- சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருகில் இருக்கும் ஊர் குருவித்துறை.
இங்கு சித்திரரத வல்லபப் பெருமாள் ஆலயம் உள்ளது.
குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர்.
குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணன் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார்.
இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.
இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக் கோவில் உள்ளது.
வைஷ்ணவக் கோவிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச் சிறப்பு.
- இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது.
- சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம்.
சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது.
பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம்.
வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இங்கு இருக்கும் இறைவன் திரு வலிதாயநாதர், மற்றும் திருவல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
அம்பிகையின் பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற புண்ணிய தலம்.
தக்கோலம்
அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது.
சடையோடு கூடிய முகம்.
சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம்.
இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலை நயத்தோடு உள்ளார் தட்சிணா மூர்த்தி.
- குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
- இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர்.
இத்தலம் கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது.
நாகப் பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம்.
வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது.
தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது.
இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழி பட்டுள்ளனர்.
வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை.
வியாழபகவானுக்கு குரு பட்டத்தை சிவபெருமான் வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி "தேவகுரு' என அழைக்கப்படுகிறார்.
குரு தோஷம் நீங்க இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஜென்ம ஜாதகத்தை வைத்து அனுக்கிரக தட்சணாமூர்த்தியை வழிபட திருமணம் உடனே கைகூடும் என்பது ஐதீகம்.
- இங்குள்ள முருகப் பெருமானை வழிபடுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது.
- வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம் இது.
குருதோஷம் நீங்க தேப்பெருமா நல்லூரிலுள்ள அன்னதான தட்சிணா மூர்த்தியை வணங்க வேண்டும்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது.
திருச்சீரலைவாய் என்றும் அழைக்கப்படும் இத்தலம் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் உறைகின்ற இடம்.
இங்குள்ள முருகப் பெருமானை வழிபடுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது.
வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம் இது.
குரு தோஷம் நீங்க இங்கு முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன.
- இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார்.
- மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள்.
ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார்.
அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார்.
மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள்.
மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்டமங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.
- இங்கு வியாழ பகவான் தனி சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார்.
- மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார்.
குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இங்கு வியாழ பகவான் தனி சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார்.
மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார்.
திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார்.
இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட யோகம் தரும் அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- ஒருவரின் வாழ்வில், குருவின் கடாட்சம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும்.
- பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள்.
குருவின் பார்வை இருந்தால்தான் எல்லா நல்ல விஷயங்களும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.
உமையவளுக்கே குருவின் பார்வை கிடைத்ததும்தான் திருமணம் நடந்தேறியது என்கிறது புராணம்.
நவக்கிரகங்களில் சுபகிரகம் வியாழ பகவான்.
அந்த வியாழ பகவான் தான், தேவர்களின் குரு.
அவரை பிரகஸ்பதி என்பார்கள். இவர்தான் குரு பகவான். குருப்பெயர்ச்சி என்பது இவருக்குத்தான்.
இவரை வைத்துத்தான் குருப்பெயர்ச்சி.
ஒருவரின் வாழ்வில், குருவின் கடாட்சம் இருந்துவிட்டால், செய்யும் தொழில் சிறக்கும்.
பதவி உயர்வு இருக்கும். நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள். குருவருளுடன் இறையருளும் கிடைக்கப்பெறுவார்கள்.
நவக்கிரகத்தில் உள்ள வியாழ பகவான், தேவர்களின் குரு! குருவுக்கெல்லாம் குரு! ராஜகுரு
இந்த ராஜகுருவுக்கு அதிதேவதையாகத் திகழ்பவர் தட்சிணாமூர்த்தி.
அதனால்தான் குருப்பெயர்ச்சி முதலான தருணங்களில், தட்சிணாமூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ராஜ குரு என்று போற்றப்படும் வியாழ பகவான், தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கும் திருத்தலம் தென்குடித்திட்டை.
வேதங்கள் நான்கும் சிவனாரை வணங்கி வழிபட்ட திருத்தலம் என்று திட்டை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
திருஞான சம்பந்தர், இந்தத் தலத்து இறைவனை, வசிஷ்டேஸ்வரரை மனமுருகிப் பாடியுள்ளார்.
தலத்தின் பெருமையைச் சிலாகித்துப் போற்றியுள்ளார்.
- பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும்.
- சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
பொதுவாக, யோகம் தரும் குருவைப் போற்றிக் கொண்டாடினால், பொன்னான எதிர்காலம் அமையும்.
குருவை நாம் கோவிலுக்குச் சென்று வழிபடும் பொழுது, அதன் பார்வை நம்மீது பதியும் விதத்தில் நேராய் நின்று வழிபட வேண்டும்.
சனியை சாய்வாய் நின்று கும்பிடு! குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அந்த அடிப்படையில் குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும்.
குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:
"வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!
கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!
நிலையாய் தந்திட நேரினில் வருக!"
"நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!
உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!
வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!
என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்".
- கஜகேசரி யோகம் பெற்றவர்கள் செல்வம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.
- ஒழுக்கமான வாழ்க்கை உள்ளவர்களாக இந்த “ஹம்ச” யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.
குருபகவான் தரும் யோகங்களில் குறிப்பிடத்தக்க யோகங்கள் ஐந்தாகும்.
1) கஜகேசரி யோகம் 2) குருச்சந்திரயோகம் 3) குரு மங்களயோகம் 4) ஹம்சயோகம் 5) சகடயோகம்.
அவற்றை பற்றிய விளக்கம்:
1) கஜகேசரி யோகம்: குரு, சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் "கஜகேசரி யோகம்" உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவராக விளங்குவர்.
2) குருச்சந்திரயோகம் : சந்திரனுக்கு குரு 1, 5, 9 ஆகிய இடங்களில் காணப்பட்டால் "குருச்சந்திரயோகம்" உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ்மிக்கவராகவும், நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.
3) குரு மங்களயோகம் : குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் "குரு மங்கள யோகம்" ஏற்படும். இந்த யோகத்தை பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்புண்டு.
4) ஹம்சயோகம் : சந்தினுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகிறது. நல்ல உடலமைப்பும், ஒழுக்கமான வாழ்க்கையும் உள்ளவர்களாக இந்த "ஹம்ச" யோகத்தில் பிறந்தவர்கள் திகழ்வார்கள்.
5) சகடயோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், "சகடயோகம்" ஆகும். வண்டிச்சக்கரம் போல் இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்தேயிருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்