என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gurupujai"
- பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா.
- 2-ம் நாளான இன்று அரசியல் விழா.
மதுரை:
விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவாகவும், இரண்டாம் நாள் அரசியல் விழாவாகவும், மூன்றாம் நாள் குரு பூஜை விழாவாகவும் நடை பெற்று வருகிறது.
அதன்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று பசும்பொன்னில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், பழனி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில்யாக வேள்வியுடன் தொடங்கியது.
பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை, வேள்வி மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.
முன்னதாக கமுதி பஸ் நிலைய பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பிருந்து ராமநாதபுரம் மாவட்ட மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து தேவர் நினை விடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தேவரின் பக்தர்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் வணங்கினர். மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான இன்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவாளர்கள் பேசுகிறார்கள்.
நிறைவு நாளான நாளை (30-ந்தேதி) குருபூஜை விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், மேயர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
பின்பு புதூர் செல்லும் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (30-ந்தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையத்தில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குருபூஜையில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். இதையடுத்து மதுரை வரும் விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முக்குலத் தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள்.
பாதுகாப்பு முன்னேற்பா டுகளை கருத்தில் கொண்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், மதுரை முதல் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும், டிரோன் கேமிரா பறக்க தடை விதித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா.
- சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர் சேரமான் பெருமான் நாயனார்.
சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார். சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார்.
அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
சிவபெருமான் மீது, பண்களுடன் 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருப்பூர், திருமுருகண்டி பூண்டியில் சுந்தரர் தங்கியிருந்த போது, சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, பொருட்களை கவர செய்து, திருவிளையாடல் புரிந்தார்.
அப்போது, வெஞ்சிலை வடுக வேடுவர் எனும் பதிகம் பாடியதால், அகம் மகிழ்ந்த இறைவன், சுந்தரரின் பாடலுக்காக, கவர்ந்த பொருட்களை கோவில் முன் குவித்தார்.
சிவாலயங்கள் தோறும் பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடக்கும். பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
வெள்ளை யானை வாகனத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டு, அவருடனே பல கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கியவர்; சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர், கழறிற்றறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமான் நாயனார்.
அரசராக இருந்தாலும், சிவதொண்டையே பெரும் பாக்கியமாக கருதி, சுந்தரரோடு கயிலாயம் அடைந்த சேரமான் பெருமாள், குரு பூஜையும் இன்று.
- காளையார் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது.
- அரசியல் கட்சியினர் மரியாதை-2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காளையார்கோவில்
சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். பின்னர் அவர்களது கடைசி ஆசை யின்படி மருது சகோத ரர்களின் உடல்கள் காளை யார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ் வரர் கோவில் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் தியா கத்தை போற்றிடும் வகை யில் ஆண்டுதோறும் அக். 27-ந்தேதி மருது பாண்டி யர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான 222-வது குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வௌ்ளிக் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு தியாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி யும் வழிபாடு நடத்துவார்கள்.
அதன்பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப் பினர், பொதுமக்கள் மருது பாண்டியனர் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வார்கள். குரு பூஜை விழா வில் ராமநாதபுரம், சிவ கங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள காளை யார்கோவிலுக்கு வரு வார்கள்.
இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முக்கிய வழித்தடங்க ளான திருப்புவனம், சிவ கங்கை, கல்லல், இளை யான்குடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். குருபூஜை விழாவிற்கு வருவோர் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகனங்ளில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. கோஷங்கள் போடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.
மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்