என் மலர்
நீங்கள் தேடியது "Gutka sales"
- லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து சென்று பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.
- போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்று பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட முருகன் அங்கேயே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.42 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.