search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H C"

    • அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
    • தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்பட 81 பேர் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி, ''தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இணைக்கப்பட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என்று ஐகோர்ட்டு 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் 2017-ம் ஆண்டு உறுதி செய்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து, சுமார் 275 பேரது பணியை நிரந்தரம் செய்தது. இந்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

    மாநகராட்சிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ''பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு மனு தாக்கல் செய்து, அந்த மனு நிலுவையில் உள்ளது'' என்று கூறினர்.

    இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ''தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தாலும், ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை.

    தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதனால், 3 ஆண்டுகள் தற்காலிக பணியை முடித்துள்ள மனுதாரர்களும் நிரந்தர பணி பெற தகுதியானவர்கள்தான்.

    அதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
    • மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை:

    மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கப்பட்டது. 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரித்து வருகிறது. இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை முடித்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதற்கான நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழில் காலை வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து சொல்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. தமிழ் கலாசாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.

    நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, அது சமூகத்தின் பிரச்சனையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது.

    மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கலாசாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது. நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்தபோது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2000-க்கும் அதிகமான உத்தரவுகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து காணோலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டு 20-வது ஆண்டு நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ், சுந்தர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் தமிழகத்தின் 100 இ-சேவை மையங்கள் காணோலி காட்சி மூலம் திறந்த வைக்கப்பட்டது. முடிவில் நீதிபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இதில் மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மீது நடிகை ரோஜா அளித்த புகாரில் வழக்கு பதிய வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#ActorRoja #TeluguDesamParty

    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜாவை, பெணமலூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பொடே பிரசாத் அவதூறாக பேசி பேட்டி கொடுத்தார்.

    இதையடுத்து ரோஜா போலீசில் பொடெ பிரசாத் மீது புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர் பாக ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

     


    அதில், என்னைப்பற்றி அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய பொடே பிரசாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கூறி இருந்தார்.

    மேலும், பொடே பிரசாத் பேசிய சிடியையும் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், பெண் எம்.எல்.ஏ.வான ரோஜா பற்றி பொடே பிரசாத் தரக் குறைவாக பேசி இருக்கிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.#ActorRoja #TeluguDesamParty

    ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயமான சம்பவம் தொடர்பாக குறித்து போலீஸ் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Statuemissing

    சென்னை:

    திருச்சியை சேர்ந்தவர் எம்.ஆனந்த் மோகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் என்ற ஊரில் ஹகோகரணேஸ்வரர்-பிரஹதம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், 3 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆன ஸ்ரீ பிரகதம்பாள் சாமி சிலை செய்து, இந்த கோவிலில் வைத்தார்.

    பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ஸ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்து விட்டு, அதற்கு பதில் கிரானைட் கற்களால் ஆன மாற்றுச் சிலையை செய்து கோவிலில் வைத்து விட்டார்.

    அதேநேரம், அந்த பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள தொண்டைமான் அரசுகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், ஒரு இடத்தில் புதைத்து வைத்தார். இந்த நிலையில், அந்த விலை மதிக்க முடியாத பச்சை மரகத சிலை, பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட நிலம், தற்போது கார்த்திக் தொண்டைமானுக்கு சொந்தமானதாக உள்ளது.


    எனவே, மாயமான சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் கடந்த 2013ம் ஆண்டு 2 முறையும், கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விலை மதிக்க முடியாத பச்சை மரகத சாமி சிலையை மீட்கும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கோபால கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வருகிற 20ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    ×