என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "halal meat"

    • ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள்.
    • மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.

    மகாராஷ்டிராவில் 100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக malharcertification.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் நிதேஷ் ரானே இந்துக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

    ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள். இந்து மக்கள் ஹலால் மற்றும் ஹலால் இல்லாத கடைகளிலும் இறைச்சி வாங்குவார்கள். இந்நிலையில், ஹலால் இறைச்சி கடைகளுக்கு போட்டியாக இந்த புதிய நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

    ரம்ஜான் வருவதை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக அரசு முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • நாளை அதிகாலை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின்போது பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் ஓட்டலில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹலால் மாட்டிறைச்சி கிடைக்கவில்லை. இதனால் மாட்டிறைச்சியை ஓட்டலுக்கு தருவித்து அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    ஆப்கானிஸ்தான் அணி உணவுப் பட்டியலில் ஹலால் இறைச்சியும் இடம்பிடித்திருந்தது. எனவே ஹலால் மாட்டிறைச்சி ஒரு பிரச்சனையாக மாறியது.

    இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வீரர் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. சில சமயம் நாங்களே சமைப்போம். அல்லது சில சமயங்களில் வெளியே செல்வோம். இந்தியாவில் கடந்த உலகக் கோப்பையில் எல்லாம் சரியாக இருந்தது. ஹலால் மாட்டிறைச்சி இங்கு ஒரு பிரச்சனையாக மாறியது. ஒரு நண்பர் ஹலால் மாட்டிறைச்சியை எங்களுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் சொந்தமாக சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்தார்.

    ×