என் மலர்
முகப்பு » hang couple
நீங்கள் தேடியது "hang couple"
திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வம் (26). இவருக்கு திருமணமாகி மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.
அதே ஊரைச் சேர்ந்தவர் வனிதா(22). இவருக்கு திருமணமாகவில்லை. இவருடன் தெய்வம் நெருங்கி பழகி காதலித்து வந்துள்ளார். இதைதொடர்ந்து இருவருக்கும் அண்ணன், தங்கை உறவு முறை வருவதால் பழக்கத்தை கைவிட முடியாமல் மனமுடைந்தனர்.
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்கள் ஊரின் அருகே ஒரு மாந்தோப்பில் உள்ள மரத்தில் கயிற்றினால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். புகாரின் பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து இறந்து போன தெய்வம், வனிதாவின் உடல்களை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
×
X