search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Happy Birthday"

    • கோலி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் விராட் கோலியின் பிறந்தநாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "சிறப்பான Comeback நம்முடைய Setback-ல் இருந்துதான் வருகிறது. இந்த உலகம் உங்களின் Comeback-ஐ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது.

    கடந்த காலத்தில் அதை நீங்கள் செய்தீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை அதை செய்து காண்பிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.
    • பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவர்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டவரும், தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.

    உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என முழங்கியதோடு, அவற்றையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டு தமிழுக்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சி.பா.ஆதித்தனாரின் அரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

    அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இன்று 86-ஆம் பிறந்தநாள். அவரால் வாழ்வு பெற்ற கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆயிரம் பிறை கண்டும் இன்னும் ஓய்வு என்பதை அறியாமல் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பிதாமகன் அவர். இளம் வயதில் கல்விக்காக அவர் பட்ட பாடுகள் தான், எனக்கிருந்த தடைகள் வேறு எவருக்கும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், இன்றைய தலைமுறை எளிதாக கல்வி கற்கத் தேவையான அனைத்தையும் போராடி பெற்றுத்தர வைத்திருக்கிறது அந்த பெரிய மனிதரை.

    6 வகையான இட ஒதுக்கீட்டில் தொடங்கி தமிழ்நாட்டு மாணவர்களை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வை ரத்து செய்தது வரை தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான புரட்சிகளை தலைமையேற்று சாதித்த சமூகநீதிக் காவலர் அவர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும், 35வயதில் இந்தியாவின் இளம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்தது, அதற்காக பல்வேறு

    விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது உள்ளிட்ட நான் பெற்ற பேறுகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் அய்யா.

    என்னைப்போலவே, உலகின் 140 நாடுகளில் பல்வேறு பெரும் பொறுப்புகளை வகித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமான தனிப்பெரும் நாயகன் மருத்துவர் அய்யா.

    ஆனாலும், அவருக்கும் நிறைவேறாத சில ஆசைகள் இன்னும் இருக்கின்றன. சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் சார்ந்த மருத்துவர் அய்யா அவர்களின் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்! என்று கூறியுள்ளார்.

    • தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்.
    • வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தளபதிவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தான் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று கருதுபவர்கள் சான்றோர்கள். இதற்கும் ஒருபடி மேலே சென்று, "தான் பெறாத இன்பம் பிறர் யாவரும் பெற வேண்டும்" என்ற பெருநோக்கோடு ஊர்கள் தோறும் தொடக்கப்பள்ளி, பேரூர் தோறும் நடுநிலைப் பள்ளி, நகரங்கள் தோறும் உயர்நிலைப் பள்ளி எனக் கொண்டு வந்து தமிழகத்தில் கல்விக் கண்ணைத் திறந்து வைத்த கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர் செய்த தியாகங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று கூறியுள்ளார்.

    • காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.
    • ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தை தனது எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்து அதில்

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
    • ரசிகர்கள் காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவர்கள் ஹீரோவாகத் தான் நடிப்பார்கள். ஆனால் இதற்கு இணையாக தற்போது வரை த்ரிஷா ஹீரோயின் ஆகவே நடித்து வருகிறார்.

    அதிலும் விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.


    நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்த லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் மூலம் இவரோட கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் த்ரிஷா எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். த்ரிஷா விஜய்யுடன் ஃலிப்ட் ஒன்றில் பயணிக்கும் போது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.


    இந்த பதிவிற்கு விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் "The most special wish for Thalapathy GOALS" என்று காமெண்ட்கள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தல பதிவில் தெரிவித்துள்ளார்.
    • இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்த வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜயின் 50-வது பிறந்த இன்று அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பகிர்ந்த வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தல பதிவில் தெரிவித்துள்ளார்.

    அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார்,
    • சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.

    உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.

    பிறப்பு மற்றும் கல்வி

    சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.

    வாழ்க்கை

    மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார், ஒன்று சென்னை மற்றொன்று அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ்.

    • சமூக வலைதளத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
    • நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பூங்கொத்து வழங்கி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
    • பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு அடுத்த மாதம் வெளியானதும் அ.தி.மு.க.வில் பிரிவு ஏற்படும் என்றும், அப்போது கட்சிக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? அல்லது எஸ்.பி.வேலுமணியா? என தெரிய வரும் என்றும் தி.மு.க. அமைச்சர் ரகுபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கத்தை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைக்க தவறி விட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாகவே எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், சமூக வலை தளங்களில் செய்திகள் உலா வந்தன.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடிய போது அ.தி.மு.க.வில் உள்ள பலரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு வந்தனர்.

    ஆனால் எஸ்.பி.வேலுமணி மட்டும் செல்லவில்லை. அதற்கு பதிலாக தனது எக்ஸ் வலைதளத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

    எக்ஸ் வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.வேலுமணி எதற்காக நேரில் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லை என்று அ.தி.மு.க.வினர் பேசத் தொடங்கினார்கள்.

    இந்த நிலையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை வந்து அடையாரில் இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    தன்னுடன் வந்திருந்த ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவிக்கையில், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை திறம்பட நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் சில பைத்தியக்காரர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து அனைவரும் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத் ேதாம். அவரது தலைமையில் கட்சி வீறுநடை போடுவதாகவும் தெரிவித்தார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய ஆலமரம் அதன் கீழ் எல்லோரும் இருக்கிறோம். இங்கு பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    செங்கோட்டையனின் பேரன் திருமணம் வரவேற்பு கோவையில் ஜூன் 16-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்துகிறார்.

    எனவே கட்சி வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெளியில் பிதற்றுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

    இதேபோல் மூத்த தலைவர்களும் தி.மு.க.வை சாடி உள்ளனர். 

    • நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளை இன்று தொண்டர்களோடு கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    பிறந்த நாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



    • வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "தமிழ் எங்கள் உயிரென்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    ×