search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassing"

    • சுமார் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மூதாட்டி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் பிரபாகரன் (38), என்பவர் கடந்த 9ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    எகிப்து நாட்டில் குரங்குக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது தொடர்பாக பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். #Egypt #Monkey #Women
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்கிற கடைக்கு பஸ்மா என்ற 25 வயது பெண், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் சென்றிருந்தார்.

    அங்கு அவர் ஒரு குரங்கினைப் பார்த்து ரசித்து அதனுடன் விளையாடினார். அப்போது அவர் சிரித்தவாறே அந்த குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி, செக்ஸ் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

    இதை ஒருவர் ரகசியமாக செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 90 விநாடிகள் ஓடிய அந்த வீடியோ, அங்கு தீவிரமாக பரவியது.

    அதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது மன்சூரா நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பஸ்மா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.  #Egypt #Monkey #Women 
    ரெயில்களில் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EveTeasing #Women #Train
    புதுடெல்லி:

    ரெயில்களில் பயணம் செய்யக்கூடிய பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென ரெயில் பாதுகாப்புபடை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ரெயில்வே பாதுகாப்புபடையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெயில்களில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மற்றும் பெண்களிடம் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே போலீசாரின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ரெயில்வே போலீசாரின் உதவி இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-மாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #EveTeasing #Women #Train
    ×