என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hardeep Singh Nijjar"
- நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
- ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை
ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.
ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- நிஜ்ஜார், கனடாவின் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லபப்ட்டார்
- தீவிரவாதிக்கு கனடா ஏன் அடைக்கலம் கொடுத்தது என ரூபின் கேள்வி எழுப்பினார்
இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா போன்ற நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வேன்கூவர் நகரில் கடந்த ஜூன் மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) எனும் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
சில தினங்களுக்கு முன் கனடா நாட்டதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலையில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டினை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதன் தொடர்ச்சியாக கனடாவிலுள்ள இந்தியாவின் தூதரை கனடா வெளியேற்ற, பதிலடியாக இந்தியா, கனடா நாட்டு தூதரை இங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்த பிரச்சனையில் தனது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் கனடா, இந்தியாவிற்கு எதிராக தங்களோடு இணைய அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தது.
இரு நாட்டு உறவிற்கும் சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ள இந்த சிக்கல் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்ததாவது:
கனடாவின் இந்த குற்றச்சாட்டு, இந்தியாவை விட கனடாவிற்குத்தான் அதிக அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய உறவா அல்லது அமெரிக்க உறவா என முடிவெடுக்க வேண்டிய கட்டம் வந்தால், அமெரிக்கா இந்தியாவுடன்தான் துணை நிற்கும். இந்தியாவுடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. கனடா, இந்தியாவோடு சச்சரவில் ஈடுபடுவது, ஒரு எறும்பு, யானையுடன் சண்டையிடுவது போலாகும். தனது குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரத்தை தர ஜஸ்டின் ட்ரூடோவால் முடியவில்லை. இந்தியாவால் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது எதற்காக என கனடா விளக்க கடமைப்பட்டுள்ளது. பிளம்பராக வேலை செய்து வந்த கொல்லப்பட்ட நிஜ்ஜார் ஒன்றும் சுத்தமான மனிதரல்ல; அவரது கரங்கள் ரத்தக்கறை படிந்தவை.
இவ்வாறு மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
- காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டு
- கனடாவில் இருந்து இந்திய அதிகாரி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்தியா பதிலடி
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது.
கனடாவின் இந்த உத்தரவையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவரிடம், கனடாவில் ராஜதந்திர அளவிலான மூத்த தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்