என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "has increased"

    • ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது.
    • இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.

    ஈரோடு:

    கோடைக்காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

    வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரி பிஞ்சுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை சாப்பிட்டு வருகின்றனர்.

    இதனால் பழங்கள் விலை கடந்த வாரங்களை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது.

    ஈரோடு பழமார்க்கெ ட்டில் இன்று இத்தாலி, துருக்கி ஆப்பிள் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரான் ஆப்பிள் கிலோ ரூ.120-க்கும், மாதுளை கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரைக்கும் விற்பனை யானது.

    மேலும் ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.120-க்கும், நாக்பூர் ஆரஞ்சு கிலோ ரூ.60 முதல் ரூ.80-க்கும், திராட்சை கிலோ ரூ.70-க்கும் விற்பனையானது.

    இதேபோல் சாத்துக்குடி கிலோ ரூ.70-க்கும், சப்போட்டா கிலோ ரூ.40-க்கும் பன்னீர் திராட்சை கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பழங்களின் விலை உயர்ந்தாலும் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் வழக்கம் போல் பழங்களை வாங்கி வருகின்றனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை

    1 லட்சத்து 34 ஆயிரத்து 354 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 150 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×