search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hasam Israel War"

    • இஸ்ரேல் வான்தாக்குதலில் காசாவில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டம்
    • கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்க முடியாத பரிதாபம்

    அக்டோபர் 7-ந்தேதி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை, தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா சீர்குலைந்துள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலை தாக்குப்பிடிக்காமல் கட்டங்கள் இடிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதுவரை காசாவில் 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்களை உடனடியாக தென்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கும் மேற்பட்டோர், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஐ.நா. நடத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். ஐ.நா. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தற்காலிக முகாமாக மாற்றியுள்ளது.

    இந்த நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் கிடக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஐ.நா. பொதுச்சபையில் காசா மீதான போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை விமர்சித்த இஸ்ரேல், போரின் 2-ம் கட்ட நிலை தொடங்கியுள்ளது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×