என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hashmathullah Shahidi"

    • இலங்கை அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறியது.
    • ஆப்கானிஸ்தான் அணி 2 ரன்னில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 2 ரன்னில் வென்ற இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷகிடி , வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் நன்றாகப் போராடினோம், 100 சதவீதம் கொடுத்தோம். நாங்கள் விளையாடிய விதம், பேட்டிங் செய்த விதம் குறித்து அணிக்கு பெருமை. கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டி வடிவத்திலும் நாங்கள் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன்.

    இன்னும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டியில் எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன. நாங்கள் உலகக் கோப்பைக்கு மிக அருகில் இருக்கிறோம், இங்கே நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நாங்கள் கற்றுக்கொள்வோம். எங்களுக்கு ஆதரவாக உள்ள ரசிகர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துக்கு இடையே முதல் முறை டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
    • இரு அணிகள் மோதும் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வரும் 9-ம் தேதி நடக்கிறது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துலா ஷாஹிடி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சட்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலி கில், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷம்ஸ் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், கலீல் அஹ்மத்.

    • மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 425 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ரஹமத் ஷா இரட்டை சதமடித்து அசத்தினார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

    ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்துள்ளது. ரஹமத் ஷா 231 ரன்னும், ஹஷ்மதுல்லா 141 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 361 ரன்கள் சேர்த்துள்ளது. நேற்று முழுவதும் ஜிம்பாப்வே அணியால் ஒரு விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை.

    • நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 515 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் ஹஷ்மதுல்லா 179 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி 154 ரன்னும், கேப்டன் கிரெய்க் எர்வின் 104 ரன்னும் எடுத்தனர். பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் கர்ரன் 74 ரன்னிலும், கைடனோ 46 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 3 விக்கெட்டும், நவீத் சட்ரன், ஜஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. ரஹமத் ஷா இரட்டை சதமடித்தும், ஹஷ்மதுல்லா சதமும் அடித்து அசத்தினர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ரஹமத் ஷா 234 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஷ்மதுல்லா ஷாஹிடி பொறுப்புடன் ஆடி வருகிறார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 364 ரன்கள் சேர்த்துள்ளது.

    இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 515 ரன்கள் குவித்துள்ளது. ஹஷ்மதுல்லா 174 ரன்னும், அப்சர் சசாய் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    முதல் இன்னிங்சே இன்னும் முடிவடையாததால் இந்தப் போட்டி டிராவில் முடியும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

    ×