என் மலர்
நீங்கள் தேடியது "HC Madurai Bench"
- இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
- அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை :
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது.
எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்கனை மதுரை உயர்நீதிமன்ற கினை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
- தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
- திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
மதுரை:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகரான சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூ-டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றனர்.
பின்னர், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.
கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்த பின், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.
- ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி கோரிப்பாளையம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வழியாக ஊர்வலம் சென்று வருவார்கள்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த விக்டோரியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் சட்டப்படிப்பு முடித்து ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த வீடியோவில், மதுரை கோரிப்பானையந்தில் உள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வழியே தத்தனேரி மயானத்திற்கு சென்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள் மது அருந்திவிட்டு, கூச்சலிட்டும் மாணவிகளை அச்சுறுத்தியும், அதை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை அடித்து தாக்கி, அங்கிருந்த மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். மாணவிகள் அனைவரும் கல்லூரி முடிந்து வெளியே வரும்போது நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்து பயந்துபோய் மாணவிகள் மீண்டும் கல்லூரிக்குள் சென்று விட்டனர்.
இது தொடர்பாக மதுரை செல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கடந்த 30-ந்தேதி தேவர் குரு பூஜை அன்று மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள், மோட்டார் சைக்கிள்களில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள், அங்கிருந்த காவலாளிகளை தாக்கியதுடன் மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மதுரை கே.புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி கோரிப்பாளையம் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வழியாக ஊர்வலம் சென்று வருவார்கள். இதே போல தத்தனேரி மயானத்திற்கு கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சவ ஊர்வலம் இந்த கல்லூரி வழியாக தான் செல்கிறது. எனவே இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக 'நிர்பயா நிதி' என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
எனவே அந்த நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் நிர்பயா நிதியின் கீழ் பல்வேறு மாநிலங்களில் உரிய பாதுகாப்பை பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். தமிழகத்தில் அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிப்பது அரசின் கடமை. ஆனால் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை.
- வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-
ஆன்லைன் லாட்டரி விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளுக்கான சந்தையும் தற்போது காளான்கள் போல அதிகரித்து வருகின்றது.
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் நிகழ்வுகள் என தீங்குகளே அதிகம் நிகழ்கின்றன. இதனால் ஏராளமான குடும்பங்களும் சிதைந்துள்ளன. பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி, அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றை விளையாடுவதை தவிர்க்கும் வகையில், அதற்கான இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழைய வயதை உறுதி செய்யும் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அவரது மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கும்போது, "18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுக்கள் தெரியவந்தது எப்படி? அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.
பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்" என கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
- அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மனுதாரர்கள் விற்பனை செய்துள்ளனர்.
- பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
மதுரை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தர், சிவக்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனை செய்ததாக எங்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மனுதாரர்கள் விற்பனை செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் கோர்ட்டு விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் சண்முக சுந்தர் ரூ.50 ஆயிரமும், சிவக்குமார் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும் நெல்லை மருத்துவ கல்லூரிக்கு நலத்திட்ட உதவி தொகையாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2 பேருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
- கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை:
புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அந்தப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதற்கு நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
- மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
- மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் மேலூரில் பருவமழை பெய்ததால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் அறுவடை செய்யக்கூடிய நெல் மூட்டைகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக நெல் கிடங்கிகள், பாதுகாப்பு மையம் இல்லை.
இதனால் விவசாயிகள் மிகுந்த உழைப்பை கொடுத்து விளைவித்த நெல் மணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. அந்த இடங்களில் எல்லாம் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
- இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்கு சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை. இந்த யானையின் பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் வழக்கை தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி யானையை பாகனிடம் இருந்து பிரித்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், யானை தொடர்ந்து பாகனின் பராமரிப்பிலேயே இருக்கட்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக கோவில் விழா ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட போது யானைக்கு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த உத்தரவில் தெரிவித்ததாவது:-
லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை பாகனிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக பராமரித்து அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறும் உத்தரவிட்டிருந்தார்.
யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையிலும், யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மருத்துவர் கலைவாணனை லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும். யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன் விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். முறையான சிகிச்சையும், உணவும் யானைக்கு வழங்கப்பட வேண்டும்.
லலிதா யானைக்கு 60 வயது இருக்கக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் சரியான உணவு, பராமரிப்பு வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். லலிதா யானையை எந்தவிதமான வேலைகளிலும் ஈடுபடுத்த கூடாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் எந்த யானையையும் இனிமேல் வளர்ப்பு யானையாக மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது பல இடங்களில் யானைகளுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை. பாகன்கள் குடித்துவிட்டு யானையை துன்புறுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதன் காரணமாக சில சமயங்களில் யானை ஆக்ரோஷமாக மாறி பாகன்களை தாக்கும் சூழல் ஏற்படுகிறது.
ஆகவே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற ஐகோர்ட்டின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம். ஆகவே அது தொடர்பாக ஆலோசித்து அதன் அடிப்படையில் அனைத்து கோவில்களுக்கும் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும். எல்சா பவுண்டேஷனின் தரப்பில் திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைப்பதற்கு தகுந்த இடங்களாக உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாம் அமைக்க உகந்த இடமில்லை எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே இது தொடர்பாகவும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
- தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
- தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மதுரை:
டெல்லியைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார் உம்ராவ். இவர் டெல்லி பா.ஜ.க. பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், வந்த தகவலை பதிவேற்றம் செய்ததாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை.
நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது. இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகையால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி இது போன்ற வீடியோக்களை பதிவு செய்வதை பார்க்கும்போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்தார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து விட்டார். இந்த மனு குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
- தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
- மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிராமத்தில், கல்குளம், வண்ணான்குளம் என பல்வேறு குளங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்களில் நீரை தேக்கி எங்கள் பகுதி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளங்கள் சுற்று வட்டாரத்திற்கும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில் தற்போது குளங்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
குளத்தில் இருக்கக்கூடிய தாமரை செடிகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே கல்குளம் மற்றும் வண்ணான் குளம் ஆக்கிரமித்துள்ள தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குளங்களில் தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ள புகைப்படங்களை சமர்ப்பித்தார்.
இதனைப் பார்த்த நீதிபதிகள் தாமரை செடிகள் குளங்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்தால் நீர் கெட்டுவிடும் என்பதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான சான்றுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். பின்னர் மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெறுகிறது.
மதுரை:
கொரோனா பரவல் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஐகோர்ட்டுகளில் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் இன்று (10-ந் தேதி) முதல் வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்து உள்ளது.
நேரடியாக வழக்குகள் விசாரணை நடந்தாலும், வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுநல வழக்குகளை தொடுத்து நேரடியாக ஆஜராகுபவர்கள் உள்ளிட்டவர்கள் முடிந்தவரை கொரோனா தொற்றை தடுக்கும் வகையிலும், கோர்ட்டு அறைகளில் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அதே போல் வழக்கு தாக்கல் செய்வதற்கும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே இன்று நடைபெற்றது.
- மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார்.
- முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பொன் காந்திமதி நாதன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றப்படுகையில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் லூர்து பிரான்சிஸ்சுக்கு போதிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டனர்.
இந்த வழக்கு முறப்பநாடு காவல் ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. முறப்பநாடு காவல் ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சத்தை பெற்றுக் கொண்டு மணல் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.
இந்த சூழலில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் இந்த வழக்கை விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை வெளிவராது. ஆகவே முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதற்காக நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது மொத்த மாநிலத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அரசின் அறிக்கையின் படி தென் மண்டல காவல்துறை தலைவர் கண்காணிப்பின் கீழ், துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 4 வாரத்தில் குற்றப்பத்திரிகையை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் 3 வாரத்தில் மாவட்ட நீதிபதிக்கு வழக்கை மாற்ற வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.