என் மலர்
நீங்கள் தேடியது "HDFC"
- இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை.
- ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ஹெச்.டி.எஃப்.சி. வங்கிற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த ஆர்பிஐ, ஆக்சிஸ் வங்கிற்கு 1.92 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டெபாசிட் பணத்திற்கான வட்டி விகிதம், கடன் வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏஜென்ட், கஸ்டமர் சர்வீஸ் ஆகியவற்றில் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி இணங்காதது தெரியவந்தது. 2002 மார்ச் 31, வங்கியின் நிதி நிலை தொடர்பாக ஆர்பிஐ ஆய்வில் இந்த குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெச்.டி.எஃப்.சி. இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வியடைந்து விட்டதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்கியது. தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாக பல வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை வழங்கியது. 1.60 லட்சம் வரையிலான விவசாய கடன்களுக்கு பிணையம் (ஓரிரு வழக்கில்) ஏற்றுக் கொண்டது உள்ளிட்ட காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கியின் துணை நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இது வங்கி நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படாத வணிகமாகும்.
இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
- சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியில் நுழைந்த நபர் அங்கு ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்து, வெகுநேரமாக ஆள்நடமாட்டத்தை அறிந்து தினேஷ் காதை வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த தினேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேனேஜிங் டைரக்டராக கடந்த 2020 அக்டோபர் 27 முதல் செயல்பட்டு வருபவர் சஷிதர் ஜெகதீசன்.
- நிதியாண்டின் அறிக்கைபடி அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவும் இவரே
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களை வழிநடத்தும் தலைவர்களாக ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவங்களின் படித்தவர்களையே பார்க்க முடிகிறது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியை வழிநடத்தும் தலைவர் இது எதிலும் படிக்காதவர்.
இன்றைய தேதிக்கு ரூ.13.72 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்டது ஹெச்டிஎஃப்சி [HDFC] வங்கி. இதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் [சிஇஓ], மேனேஜிங் டைரக்டராகவும் கடந்த 2020 அக்டோபர் 27 முதல் செயல்பட்டு வருபவர் சஷிதர் ஜெகதீசன்.
வங்கித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள ஜெகதீஷன் 1996 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கியில் நிதித் துறையில் மேலாளராக சேர்ந்தார். இதற்கு முன், அவர் மும்பையில் உள்ள Deutsche Bank AG-ல் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

மும்பையில் பிறந்த இவர், மும்பை பல்கலைக்கழகத்தில் தனது பிஎஸ்சி இயற்பியல் இளங்கலை படிப்பை முடித்தார். இங்கிலாந்தில் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் பணம், வங்கி மற்றும் நிதி பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஜெகதீஷன் ஒரு தகுதி பெற்ற பட்டய கணக்காளரும் (CA) ஆவார்.
2023 நிதியாண்டின் அறிக்கைபடி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவும் இவரே. 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் அவரது மொத்த சம்பளம் ரூ.10.55 கோடியாக இருந்தது. ஆனால் மற்ற சிஇஓ- களை போல் தன்னை பொதுவெளியில் அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாதவர் சஷிதர் ஜெகதீசன்.