என் மலர்
நீங்கள் தேடியது "Healthy"
- எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
- ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:-
நெய் - ஒரு கப்
கோதுமை மாவு-ஒரு கப்
நாட்டு சர்க்கரை - ஒரு கப்
உப்பு -ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 4 நம்பர்
செய்முறை:-
ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.
அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.
இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health
- நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும்.
- ஆரோக்கியமானதாக இருக்கும்.
பேக்கரிகளிலும், டீக்கடைகளிலும் விற்கும் நெய் பிஸ்கட் என்றால் எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அந்த நெய் பிஸ்கட்டை நம் வீட்டிலேயே கூட செய்யலாம். ஓவன் தேவையே இல்லை. சுலபமாக, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, பிஸ்கட் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். எந்த ஒரு பிரிசர்வேட்டிங்கும் சேர்க்காமல், ஆரோக்கியமான இந்த பிஸ்கட்டை உங்கள் கையாலேயே செய்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். நெய் பிஸ்கட் வீட்டிலேயே எப்படி செய்வது? பார்த்து விடலாமா!
தேவையான பொருட்கள்
நெய்-200 கிராம்
மைதா-400 கிராம்
சர்க்கரை-200 கிராம்
பேக்கிங் சோடா- ஒரு சிட்டிகை
பேக்கிங் பவுடர்- அரை டீஸ்பூன்
ரீபைண்ட் ஆயில்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதனை கீரிமியான அளவுக்கு நன்றாக் பீட் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் கிரீம் அளவுக்கு பீட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் மைதா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, வாசனை இல்லாத ரீபைண்ட் ஆயில், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து அதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து அதனை ஒரு அரைமணிநேரத்திற்கு மூடி போட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.
அரைமணிநேரத்திற்கு பிறகு அந்த மாவினை எடுத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை உருண்டைகளாக உருட்டி தட்டி பிஸ்கெட் வடிவத்திற்கு வட்டமாக தட்டி எடுத்து அதனை ஒரு பிளேட்டி வைக்க வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். ஃப்ரீஹீட் ஆனதும் அதில் பிஸ்கெட்டுகளை வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான நெய் பிஸ்கெட் தயார்.
பிஸ்கட்டை அடுப்பில் இருந்து எடுத்ததும், சூடாக இருக்கும் போது, சாஃப்ட்டாக தான் இருக்கும். பிஸ்கட் நன்றாக ஆறிய பின்பு சுவைத்துப் பாருங்கள். கடைகளில் வாங்கிய சுவையை விட, உங்கள் கைகளால் நீங்களே செய்த இந்த பிஸ்கட்டின் ருசி அதிகமாகத்தான் இருக்கும்.
- ரோஜா கீரை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம்.
- கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.
ரோஜா கீர் என்பது ஒரு பாரம்பரிய இந்திய பானம், இது ரோஜா இதழ்கள், பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இனிமையான மற்றும் சுவையான பானமாகும், இது கோடைகாலத்தில் குடிப்பதற்கு மிகவும் பொருத்தமானது.
ரோஜா கீரை நீங்கள் பல வழிகளில் பரிமாறலாம். நீங்கள் அதை தனியாக பரிமாறலாம் அல்லது இனிப்புகளுடன் பரிமாறலாம். நீங்கள் அதை ஐஸ்கிரீம் அல்லது யோகர்ட்டுடன் பரிமாறலாம் அல்லது அதை கேக்குகள் அல்லது டேனிஸ் ஆகியவற்றில் ஊற்றி பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
அரிசி - 1/2 கப்
ரோஸ் வாட்டர் - 3 சொட்டு
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு
நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு
நறுக்கிய முந்திரி - சிறிதளவு
உலர் திராட்சை - சிறிதளவு
செய்முறை:
முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக வைக்க வேண்டும்.
அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும். தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
- ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பொருளாக விளங்குகிறது.
- தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
தேங்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பொருளாக விளங்குகிறது. இளநீராக, தேங்காய் துருவலாக, எண்ணெய்யாக, அலங்கார கலைப்பொருட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தேங்காயின் உட்பகுதியில் முளைக்கும் தேங்காய்ப் பூவையும் உட்கொள்ளலாம். தேங்காய் முற்றிய நிலையில் துளிர்விட ஆரம்பிக்கும் சமயத்தில் உருவாகும் இது தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
இளநீரில் இருப்பதை விட இதில் அதிக சத்துக்கள் உள்ளடங்கி இருக்கும். தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய்ப் பூவாக மாறுகிறது. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
செரிமானம்: செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கும் தன்மை தேங்காய்ப் பூவுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அசிடிட்டி, இரைப்பை அழற்சி போன்ற செரிமானம் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் தன்மையும் தேங்காய்ப் பூவுக்கு உண்டு.
நீரேற்றம்: தேங்காய்ப் பூவில் காணப்படும் ஜெலட்டினஸ் என்னும் பொருள் நீரேற்றம் கொண்டது. எலக்ட்ரோலைட்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும். இயற்கையாகவே நீரேற்றத்தை தக்கவைத்து உடலுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது.
ஊட்டச்சத்து: தேங்காய்ப்பூவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனை உட்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நலம் சேர்க்கும்.
குளிர்ச்சி: தேங்காய்ப் பூ குளிர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டிருப்பதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை சமநிலைப்படுத்தி குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டது. வெப்பமான காலநிலையில் உடலில் வெளிப்படும் மாறுபாடுகளை சமநிலைப்படுத்துவதற்கு தேங்காய்ப்பூ சாப்பிடுவது அவசியமானது.
உடல் ஆற்றல்: தேங்காய்ப் பூவில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்குவதற்கு உதவும். சோர்வில் இருந்து மீட்டெடுக்க வழிவகை செய்யும் சிறந்த சிற்றுண்டியாகவும் தேங்காய்ப்பூ விளங்குகிறது.
நார்ச்சத்து: தேங்காய்ப் பூவில் நீர்ச்சத்தைபோலவே நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அது செரிமான செயல்பாடுகளை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். உடலில் தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சேரும் கெட்டக்கொழுப்பை கரைக்கவும் தேங்காய்ப்பூ உதவும்.
இளமை: உடலில் உள்ள செல்களை புதுப்பிக்க தூண்டுவதால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். வளர்சிதை மாற்றங்களுக்கு பிறகு செல்களில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் உடலில் தங்கினால் பிரீ ரேடிக்கல் பிரச்சினை வரலாம். அதனால் ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்பட்டு விரைவாகவே வயதான தோற்றம் எட்டிப்பார்க்க தொடங்கும்.
தேங்காய்ப்பூ சாப்பிட்டு வந்தால் செல்கள் புத்துணர்சி பெறும். குறிப்பாக செல்கள் சிதைவடையாமல் ஃபிரீ ரேடிக்கல்கள் வெளியேறுவதற்கு வித்திடும். அதன் மூலம் இளமையை தக்கவைப்பதற்கும் துணைபுரியும். மேலும் தேங்காய்ப்பூவில் செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவை பிரகாசப்படுத்த வழிவகுக்கும்.
நீரிழிவு: தேங்காய்ப் பூவை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவி புரியும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் ஏற்படும் சோர்வை தடுக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி சாப்பிட்ட திருப்தியை அளிக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். கணையத்தில் இன்சுலினை அதிகமாக சுரக்க செய்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.
தேங்காய்ப்பூ சாப்பிடும் முன்பு அது தரமானதாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தேங்காய்ப்பூவின் வெளிப்பகுதி மிருதுவாக இருக்க வேண்டும். துர்நாற்றமோ, கெட்டுப்போன, அழுகிப்போன அறிகுறியோ தென்பட்டால் அதனை தவிர்த்துவிட வேண்டும். ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு உண்ண வேண்டும்.
மேலும் தேங்காய்ப்பூ ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அதனை அளவோடுதான் உண்ண வேண்டும். அதில் இயற்கை சர்க்கரைகளும், கலோரிகளும் இருக்கின்றன. அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் அதிக கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.
- உண்ண வேண்டிய உலர் பழங்கள்.
- புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும்.
உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க விரும்புவார்கள். சுவையான, குறைவான கலோரி கொண்ட சிற்றுணவை தேர்வு செய்ய தடுமாறுகிறீர்களா?
பசியை போக்குவதுடன், உற்சாகமாக செயல்பட வைக்கும் உணவு வகைகளை விரும்புகிறீர்களா? ஆம்! எனில் உலர் பழங்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் உலர் பழங்களில் சோடியம், கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவே இருக்கும்.
புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் அதிகம் கலந்திருக்கும். அவை வழங்கும் நன்மைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்யும். உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பிஸ்தா
தொடர்ந்து உலர் பழங்கள் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களுக்கு பிஸ்தா சிறந்த தேர்வாக அமையும். இது பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். இதில் ஒலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடென்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் பாலிபீனாலிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள்:
* நீரிழிவு நோயை தடுக்கும்.
* கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
* உடல் எடையைக் குறைக்க உதவும்.
28 கிராம் பிஸ்தாவில் புரதம் 5.72 கிராம், நார்ச்சத்து 3 கிராம், கார்போஹைட்ரேட் 7.7 கிராம், கொழுப்பு 12.85 கிராம், 159 கலோரிகள் உள்ளன.

முந்திரி
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, புரதம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைய உள்ளன. சிறுநீரக வடிவிலான இந்த உலர் பழம் உடல் எடையைக் குறைக்கவும், இதய நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
28 கிராம் முந்திரி பருப்பில் புரதம் 5 கிராம், நார்ச்சத்து ஒரு கிராம், இரும்பு (தினசரி தேவையில் 11 சதவீதம்), தாமிரம் (தினசரி தேவையில் 67 சதவீதம்), கார்போஹைட்ரேட் 9 கிராம், கொழுப்பு 12 கிராம், 157 கலோரிகள் உள்ளன.

அத்தி
ஊட்டச்சத்துக்கள் மிகுந்த அத்தி, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க உதவும்.
100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் புரதம் 3.3 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், இரும்பு 2.03 மி.கி., மெக்னீசியம் 68 மி.கி., கால்சியம் 162 மி.கி., வைட்டமின் சி 1.2 மி.கி., 249 கலோரிகள் உள்ளடங்கி இருக்கின்றன.

பாதாம்
இது உலர் பழங்களிலேயே முதன்மையானது, பிரபலமானது. இதில் வைட்டமின் ஈ, அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளடங்கி இருப்பதால் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் ஏற்றது. இதனை அப்படியே பச்சையாகவோ, வறுத்தோ, தண்ணீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம்.
ஆரோக்கிய நன்மைகள்:
* இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
* உடல் எடையை சீராக நிர்வகிக்க துணை புரியும்.
* சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
28 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம், 4 கிராம் நார்ச்சத்து, தினசரி வைட்டமின் ஈ தேவையில் 35 சதவீதம், தினசரி மெக்னீசியம் தேவையில் 20 சதவீதம், தினசரி கால்சியம் தேவையில் 8 சதவீதம் இருக்கிறது.

பேரீட்சை
உலர் பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த உலர் பழம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஏற்றது. உடல் எடையைக் குறைக்க உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடல் ஆற்றல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 7 கிராம் பேரீச்சம்பழத்தில் (ஒரு பழம்) புரதம் 0.2 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், சோடியம் 0.14 மி.கி, கார்போஹைட்ரேட் 5.3 கிராம், 20 கலோரிகள் உள்ளன.
ஒரு நாளைக்கு எத்தனை உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்?
உலர் பழங்களின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, தினமும் 4 முதல் 7 வரை சாப்பிடலாம். சரியான அளவில் உட்கொள்வது உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கும்.
எல்லா உலர் பழங்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா?
ஏதேனும் ஒரு உலர் பழம் சாப்பிடுவதாக இருந்தால் 4 முதல் 7 வரை உட்கொள்ளலாம். அனைத்து உலர் பழங்களையும் சாப்பிடுவதாக இருந்தால் எல்லாவற்றிலும் ஒன்று, இரண்டு எடுத்துக்கொண்டு மொத்தம் ஒரு கைப்பிடி அளவுக்குள்ளாகவே (20 முதல் 30 கிராமுக்குள்) சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைப்பதற்கு எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை குறைப்பு நடவடிக்கையை விரைவுபடுத்த விரும்பினால், தினமும் பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்புகள், உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றை மிதமான அளவில் உட்கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிக்க எந்த உலர் பழம் சிறந்தது?
உடல் எடை அதிகரிக்க விரும்பினால், முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.
உலர் பழங்களை இரவில் சாப்பிடலாமா?
உலர் பழங்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதிகாலையில் சாப்பிடுவதே சிறந்தது.
மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?
‘மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’
மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது.
இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் பேசியபோது, “காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை.
ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.” என்றார்.
“மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம்.
ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது”
மைக்ரோவேவ் அடுப்பை எப்படி பயன்படுத்த வேண்டும்?
சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள் மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது.

சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.
மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்சனை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.
மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.
‘மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.
மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:
* மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது. குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
* முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
* வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
* பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்
* தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும்.
அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.