என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Heat stress"
- சில நாட்களுக்கு முன்பாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
- நெல்லை அறுவடை செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் வைத்திருந்தனர்.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. அதிகபட்டசமாக 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். கோடை மழை பெய்யாதா, பூமி குளிர்ந்து வெப்பம் தணியாதா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சூராவளி காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், மரக்காணம், கண்டமங்கலம் திண்டிவனம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்து காற்று வீசியது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ெபய்து வருகிறது. இத்தனை நாட்களாக வீடுகளில் ஏ.சி. போடாமல் படுத்துறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் பெய்த மழையினால் பூமி குளிர்ந்தது. இதனால் இரவு நேரங்களில் குளிர் அடித்ததால் பெரும்பாலானோர் மின்விசிறியை கூட நிறுத்திவிட்டு உறங்கினர். பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளான போதும், கோடை வெப்பம் தணிந்ததால் விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதேசமயம் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விழுப்புரம் மாவட்ட கிராமப்புற பகுதிகளின் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் வைத்திருந்தனர். வெப்பசலனத்தால் பெய்த திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
- அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நார் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
- வெயில் கொடுமையில் இருந்து பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து, வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.
மதுரையில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இரவு நேரம் ஆன பிறகும் வீட்டுக்குள் வெக்கை அடிக்கிறது. நிம்மதியாக தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா சில நாட்களில் தொடங்க உள்ளது. பக்தர்கள் அனல் வெயிலை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அழகர் கோவில் வளாகத்தில் தேங்காய் நாருடன் கூடிய கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதங்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் பஸ் நிலையம், வாகனம் நிறுத்துமிடம், கிழக்கு நுழைவாயில் உள்ளிட்ட அனைத்து வளாக பகுதி களிலும் இந்த தேங்காய் நார் விரிப்பு போட்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நடந்து சென்று வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்