என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "heatwave"
- வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
- வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் கவுகாத்தி, கச்சார், பார்பேடா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. வெப்ப அலைவீச்சு காரணமாக அங்குள்ள மக்கள் மதிய நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கவுகாத்தி உள்ளிட்ட நகர பகுதிகள் அடங்கிய காம்ரூப் மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன.
- சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன. குறிப்பாக முதியவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
எனவே அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர், நர்சு உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
மேலும் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தற்காலிக சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
- மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது.
- பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது.
எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை.
பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது.
நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது" என்றார்.
- வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
- தீவிர வெப்ப அலையால் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பீகார், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த 2 நாட்களாக வெப்ப அலை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
- கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் பயணிகள் காத்திருந்ததால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் ஜூன் மாதத்தில் பாதியை கடந்தபிறகும் வெயில் குறைந்தபாடில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 117 டிகிரியை தொட்டு, அதன்பிறகு கொஞ்சம் குறைந்தாலும் சராசரியாக 110 முதல் 113 வரை வெப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.
கடந்த 2 நாட்களாக வெப்ப அலை காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அது நேற்றும் நீடித்தது. டெல்லி சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று அதிகபட்சமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தர்பங்காவிற்கு செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் (SG 486) இன்று பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏசி இல்லாமல் தவித்தனர்.
டெல்லியில் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏசி இல்லாமல் விமானத்திற்குள் பயணிகள் காத்திருந்ததால் பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
- இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். செவ்வாய்க்கிழமைக்கு பிறகு வெப்பத்தின் தீவிரம் குறையும்.
இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரையிலும், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை வரையிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்லி அசாதாரணமான வெப்ப அலையுடன் சிக்கித் தவிக்கிறது. வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, நகரம் முழுவதும் பருவகால சராசரியை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நெடுகிலும் வலுவாக கட்டமைப்பை ஏற்படுத்தி தன்னை ஸ்திரத்தன்மையுடன் நிறுவிக்கொண்டுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமயான போட்டி நிலவி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பொருட்களுக்கான தேவை மனிதர்களிடம் அதிகரித்துள்ளதால் இந்த வகை நிறுவனங்களின் தேவையும் மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கட்டமைப்பு வலுவடைத்திருந்தாலும் நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் அதன் தொழிலாளர்களுக்கு முறையான உரிமைகள் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தியாவில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் வரும் நிலையில் வெயிலின் தாக்கம் தொழிலாளர்களுக்கு பெருஞ்சுமையாக மாறி வருகிறது. இந்நிலையில் அமேசான் இந்தியா தொழிலாளர்களுக்கு வேலையிடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறுகையில், வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது வெப்ப அலை வீசும் தற்போதைய காலச் சூழலில் தொழிலாளர்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து நகர்த்தும் அமேசான் கிடங்குகள் நாடு முழுவதும் பரவி உள்ள நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கழிவறையை பயன்படுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டு இடைவேளை இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
- ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
- வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது.
நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், அரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களின் பல மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்-ஐ மீறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் நரேஷ் குமார், "வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 2-3 நாட்களாக இப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மாநில வாரியான முன்னறிவிப்பு தொடர்பாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிலிருந்து மேலும் அதிகரித்து 47 டிகிரி செல்சியஸில் நிலைபெற வாய்ப்புள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானாவில், நிலவும் மேற்கத்திய இடையூறு காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளோம்.
எவ்வாறாயினும், கோடை வெயிலின் கீழ் வடக்கில் சுட்டெரிக்கும் போது, தெற்கில் ஒரு அளவு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்" என்றார்.
தேசிய தலைநகர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கவனமாக இருக்கவும், அது அவர்களின் உடல்நலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்பெயின் நாட்டில் 2வது கட்டமாக வெப்ப அலை வீசி வருகிறது.
- சுவாச கோளாறு, இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களே அதிகம் உயிரிழப்பு.
மாட்ரிட் :
ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள். சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கராச்சி மாவட்ட மேயர் வசீம் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். #heatwavekills #Pakistan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்