search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hector"

    • மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    சீர்காழி:

    சீர்காழி வேளாண்துறை உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது :-

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண் நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தில் 2022- 23 க்கான மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33,000 கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.

    வரப்பில் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 160 கன்றுகள் 1 ஹெக்டர் வரப்புபரப்பிற்கு வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு2 ஹெக்டர் வரை வழங்க ப்படும். அதேபோல் வயல் முழுவதும் நடவு செய்வதற்கு 500 மரக்கன்றுகள் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு இலவசமாக வழங்கபடும்.

    விவசாயிகள் தாங்களே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எம்.ஜி. மோட்டார் இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 4 ஆம் தேதி துவங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவுகள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சரியாக மதியம் 12.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்ட முன்பதிவுகள் இந்தியா முழுக்க 120 மையங்களில் நடைபெறும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுக்க 250 மையங்களை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல்கள் அந்நிறுவனத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் நடைபெறுகிறது. இந்த ஆலையில் அந்நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்துள்ளது.

    "எம்.ஜி. ஹெக்டார் கார் அதிகளவு உள்நாட்டு பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறை இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் முதல் இண்டர்நெட் கார் என்ற வகையில் 50-க்கும் அதிக கனெக்ட்டெட் அம்சங்களையும், எஸ்.யு.வி. பிரிவில் 19 பிரத்யேக அம்சங்களையும் ஹெக்டார் கொண்டிருக்கிறது" என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.



    என்ஜின் அம்சங்களை பொருத்தவரை புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

    இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன்  கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.
    ×