என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "heir"
- 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
- 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 547 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.
தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும், வருவாய் துறையின் சார்பில் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சோ்ந்திட சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
- கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு கல்லூரி படிப்புகளுக்காக சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா் நலத் துறையின் மூலம் முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சோ்ந்திட சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2022-23ம் கல்வி ஆண்டில் இந்த சான்றைப் பெற கல்லூரிப் படிப்புகளுக்கான விண்ணப்பம், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சாா்ந்தோா் அடையாள அட்டை, முன்னாள் படை வீரரின் அடையாள அட்டை, படைவிலகம் சான்று ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதே வேளையில், நேரில் வர இயலாதவா்கள் இணையதளத்தில் மேற்கண்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தை 0421-2971127 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்