search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helicopters crash"

    • மலேசியாவில் கடற்படை தினத்தின் போது ஒத்திகை நடந்தது.
    • அப்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் பலியாகினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பெரக் பகுதியில் லுமுட் நகரில் உள்ள கடற்கடை தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அவைகள் நடுவானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

    அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டன. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரில் ரோட்டர் பகுதியை இடித்தது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. பின்னர் அவை தரையில் விழுந்து நொறுங்கின.

    உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து மலேசிய கடற்படை கூறும்போது, ஒத்திகை நிகழ்ச்சியின்போது 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காண உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

    மலேசிய கடற்படை தின நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    • அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது.

    நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதி, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கடந்த மாதம் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 9 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

    • அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 9 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரம் (இரவு 11 மணி ), போர்ட் கேம்ப்பெல்லுக்கு மேற்கே உள்ள டிரிக் கவுண்டியில் ராணுவத் தளம் இன்று அதிகாலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 2 பிளாக் ஹாக் மருத்துவ வெளியேற்ற விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பலியான 9 வீரர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×