search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helpline numbers"

    • புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலை.

    வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன்படி புதுச்சேரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேற்படி, கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற வாட்ஸ் அப் எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், " அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வாங்கிக் கொள்ளவும். பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். உதவிக்கு 1070, 1077, 04368227704, 228801 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர், " மொத்தமாக 4,500 முதல்நிலை மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மிக அதிகமாக பாதிக்கும் 12 இடங்கள், அதிகமாக பாதிக்கும் 33 இடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கவும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை சேதம் தொடர்பான புகார்களு்கு 1077 மற்றும் 04364- 222588 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்றார்

    • நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி- 101 & 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 9498794987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108.

    ×