search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hemanth Soren"

    • ஜார்க்கண்டில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • ஆளும் ஜே.எம்.எம். கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜே.எம்.எம். கட்சி பா.ஜ.க.வை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

    பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். பதவியேற்பு விழா நவம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனா சோரனுடன் இன்று தலைநகர் டெல்லி சென்றார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

    • சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை முன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஆஜரானார்
    • உண்மைகளை கண்டறியாமல் பரபரப்பு தகவல்களை வெளியிடக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற து. அங்கு சட்டவிரோதமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    இந்த வழக்கில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து விசாரணை தேதி 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.

    ×