என் மலர்
நீங்கள் தேடியது "Herds of elephants robbed"
- 2 குட்டிகளுடன் 7 யானைகள் கூட்டம் வனப்பகுயில் இருந்து வெளியேறியது.
- செடிகளை சூறையாடியதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் யானைக் கூட்டம் விளை நிலங்களில் புகுந்து பயிர்களையும் தென்னை மரங்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக நேற்று மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர், ேநரில் ெசன்று பார்ைவயிட்டார்.
இன்ஜினியர் தோட்டம் பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகளை தடுக்க ஆதி நாராயணன் கோவில் அருகில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளதாக நேற்று கூறினார். மேலும் யானையை விரட்ட சிறப்பு வனக்காவலர்களை இந்த பகுதியில் நியமிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் 2 குட்டிகளுடன் 7 யானைகள் கூட்டம் வனப்பகுயில் இருந்து வெளியேறி குப்பேபாளையம் பகுதியில் உள்ள ராமாத்தாள் என்பவரது குத்தகை நிலத்தில் நுழைந்தது. அங்கு அவரை பயிர் காய்கறிகளை, இரவு முழுவதும் சூறையாடியது. பின்னர் அருகே இருந்த இன்ஜினியர் தோட்டத்தில் உள்ள குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு யானைக்கூட்டங்கள் மடுவு வழியாக மருதமலை நோக்கி சென்றது. இன்று காலை வந்து தோட்டத்தை பார்த்த ராமாத்தாள் மற்றும் அவரது கணவர் சோலை யானைகள் புகுந்து அவரை செடிகளை சூறையாடியதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். தகவல் அறிந்த பகுதி வார்டு கவுன்சிலர் மணிமேகலை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும் அதிகாரிகள் யானைகள் நிரந்தரமாக வரமால் இருக்க தண்ணீர் தொட்டி கட்டும் பனியை உடனடியாக தொடங்க வேண்டும். இரவு வனக் காவலர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.