என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heroic Deed"

    • வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்து 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.

    இந்த விருைத கீழ்காணும் தகுதிகள் உள்ள பெண் குழந்தைகளிடம் இருந்து கருத்துருக்களை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண்,குழந்தை (31 டிசம்பர்-ன்படி), கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல்.

    பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

    மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய பெண் குழந்தைகள் விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 3-வது தளம், மதுரை-625 020 என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை மதுரை மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி.எண் 0452-2580259-க்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×