search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high leve"

    • முதல் முறையாக 10 மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை ஒரே நேரத்தில் வெளியானது.
    • தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் இனிப்பு தயார் செய்து தங்களது பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டனர்.

    நெல்லை:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மே மாதத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்நிலையில் முதல் முறையாக 10 மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை ஒரே நேரத்தில் வெளியானது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வு முடிவு வெளியா வதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்திருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 9,091 மாணவர்களும், 10,999 மாணவிகளும் என மொத்தம் 20,090 பேர் எழுதினர். இதில் 8,505 மாணவர்களும், 10,796 மாணவிகளும் என 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 93.55 சதவீதம் பேரும், மாணவிகள் 98.15 சதவீதம் பேரும் என மொத்தம் 96.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளர்.

    தென்காசி மாவட்டத்தில் 7,939 மாணவர்களும், 8,772 மாணவிகளும் என மொத்தம் 16,705 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 7,347 மாணவர்களும், 8,569 மாணவிகளும் என மொத்தம் 15,916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 92.61 சதவீதம் பேரும், மாணவிகள் 97.69 சதவீதம் பேரும் என மொத்தம் 95.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 8,900 மாணவர்களும், 10,473 மாணவிகளும் என மொத்தம் 19,379 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 8,380 மாணவர்களும், 10,303 மாணவிகளும் என ெமாத்தம் 18,683 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94.16 சதவீதம் பேரும், மாணவிகள் 98.38 சதவீதம் பேரும் என மொத்தம் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 11,485 மாணவர்களும், 11,805 மாணவிகளும் என மொத்தம் 23,290 பேர் எழுதினர். இதில் 9,488 மாணவர்களும், 11,171 மாணவிகளும் என 20,659 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 82.61 சதவீதம் பேரும், மாணவிகள் 94.63 சதவீதம் பேரும் என மொத்தம் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளர்.

    தென்காசி மாவட்டத்தில் 9,638 மாணவர்களும், 9,718 மாணவிகளும் என மொத்தம் 19,356 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 8,185 மாணவர்களும், 9,285 மாணவிகளும் என மொத்தம் 17,470 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 84.92 சதவீதம் பேரும், மாணவிகள் 95.54 சதவீதம் பேரும் என மொத்தம் 90.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,839 மாணவர்களும், 11,461 மாணவிகளும் என மொத்தம் 22,294 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 9,615 மாணவர்களும், 11,091 மாணவிகளும் என ெமாத்தம் 20,706 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 88.76 சதவீதம் பேரும், மாணவிகள் 96.77 சதவீதம் பேரும் என மொத்தம் 92.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் இன்று வெளியானதையொட்டி ஏராளமான மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில மாணவ- மாணவிகள் வீடுகளில் இருந்தவாறே செல்போன் மற்றும் லேப்-டாப்களில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் இனிப்பு தயார் செய்து தங்களது பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ×