search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highwaymen"

    • ராமநாதபுரம் அருகே இரவு நேரங்களில் சில கும்பல் வாகன ஓட்டிகளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் பிரதான சாலையாக நதிப் பாலம்-பனைக்குளம் சாலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை தாக்கி பொருட்களை கொள்ளை யடித்துச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடப்பதாக பொது மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    கடந்த காலங்களில் இந்த சாலையில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. போலீசாரிடம் புகார் அளித்தும் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நதிப்பாலம்-பனைக்குளம் சாலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

    மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசார் தொடர்ந்து ரோந்து சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பனைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    பனைக்குளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ராமநாத புரம் நகர் பகுதியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்ந நிலையில் வேலைக்குச் செல்பவர்கள் இரவு நேரத்தில் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. அப்படி வரும் தொழிலாளர்கள், பயணிகளை குறி வைத்து இருசக்கர வாகனங்கள், கார்களை வழிமறித்து வாகன ஓட்டிகள், பயணிகளை தாக்கி வழிப்பறிகளில் ஈடுபடுகின்றனர்.

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அந்த குற்றவாளிகள் யார்? என கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் அமைத்து தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×