என் மலர்
நீங்கள் தேடியது "Hijab issue"
- ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.
மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு அறநெறிப் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது.
- ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
- போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.
பெல்ஜியம்:
இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய பெண்களுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதத்தின் போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தலைமுடியை கத்தரித்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என கோருகிறோம் என்றார்.
- ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
- போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.
டெஹ்ரான்:
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை ஆகியவை உலகின் கவனத்தைப் பெற்றன. அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் போராட்டம் தொடர்பாக ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஹிஜாப் போலீசாரால் மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 7 வயதில் இருந்து பெண்கள் நாங்கள் எங்கள் முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரானின் சக்சேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் போலீசார் 22 வயது பெண்ணை கொன்றனர், இப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என பதிவிட்டுள்ளார்.