என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hike Demonstration"
- ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.ரமணீதரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ேராட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுத்துரை, டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ். பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ்,
அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சோமு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மாதையன் என்கிற எம்.ஜி. நாத், இளைஞர் அணி செயலாளர் கரேத்தா பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் குப்புசாமி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன்,
ஐ.டி. பிரிவு பிரகாஷ் உட்பட ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்