என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hill village"
- பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது
- அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 2 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.
இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் கஷேங் என்ற மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் சிரமப்பட்டு பயணிக்கும் வீடியோவை தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ளது.
- சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
- அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, மூல பெல்லூர், டேம் கொட்டாய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
அதே போல் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலை கிராமங்களான அரசநத்தம், கலசப்பாடி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், பென்னாகரம் ஊராட்சியில் கோட்டூர் மலை, அலகட்டுமலை, ஏரிமலை, உள்ளிட்ட மலை கிராமங்களும், ஏரியூர் ஒன்றியத்தில் மலையனூர், மலையூர் காடு, எல்லம்மாள் காடு, உள்ளன. மூல பெல்லூர் டேம் கொட்டாய், உள்ளிட்ட மலை கிராமங்களும் இன்று வரை அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி எதிர்நோக்கி காத்து கிடக்கின்றனர்.
அதில் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்தில் மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கால்நடைகள் வளர்ப்பது, விறகு வெட்டுவது, மலை தேன் சேகரிப்பது, சுண்டைக்காய், கிழங்கு வகைகள், கீரை வகைகள் சாகுபடி செய்து அன்றாடம் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எளிய கிராம மக்களுக்கும் கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம் வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும் கயிறு கட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
இதனால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் பிரசவ காலங்களில் பெரும்பாலானவர் அரசு சுகாதார நிலையங்களை நாடிச் செல்லாமல் பழைய முறையில் மருத்துவச்சி பெண்களைக் கொண்டு பிரசவம் பார்த்து வருகின்றனர்.
மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான ஒருவழி பாதையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாகவும், இதனால் இப்பகுதி மாணவர்கள் பள்ளியை தொடர்ந்து படிக்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனால் பெண் பிள்ளைகள் பூப்பெய்தவுடன் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில்;-
படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மலை குகைக்குள் இருப்பது போன்றே இருந்து வருகின்றோம். மேலும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கள் வீடுகளில் அருகே மின்சார கம்பங்கள் இருந்தும் மின் இணைப்பு கொடுப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மின் விளக்குகள் இல்லாததால் நெருப்பு மூட்டி தீ வெளிச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.
மத்திய மாநில அரசுகள் மலைவாழ் மக்களுக்கு என்று அடிப்படை தேவைகளுக்காக பல கோடி கணக்கில் நிதி ஒதுக்கினாலும் அது எங்கள் அடிப்படை தேவைக்குகூட வந்து சேர்வதில்லை. மேலும் தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வரும் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் வேட்பாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனால் தேர்தல் முடிந்தால் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நாங்கள் கோரிக்கையுடன் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் இது குறித்து ஏரியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது: ஏரியூர் ஒன்றிய பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனைவருமே புறக்கணிக்கப்படுகிறார்கள் மலைவாழ் மக்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, இதையே எங்களால் செய்து கொடுக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறை என கூறி வருகிறது என்றார்.
சுதந்திரம் பெற்று காலங்கள் கடந்தாலும் மலை கிராம மக்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
- அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.
அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
- சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.
- பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.
- அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகில் உள்ள அத்தி மரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.
உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது. அனைத்து மலைக் கிராமங்களுக்கும் அனைத்து பருவகாலங்களிலும் பயணிக்கக்கூடிய சாலைகளை அமைப்பதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தி முடிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.
- மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வனத்தில் சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்த அளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன. அதில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூர், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆனால் இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான எந்திரம் இல்லை. இதனால் பயிற்சி பெற்றும் சிறுதொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு கிராம கூட்டமைப்பு வாயிலாக எந்திரம் மற்றும் தொழில் துவங்க கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது வன உரிமைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் மற்றும் இதர சாகுபடிகளை மலைவாழ் மக்கள் துவக்கியுள்ளனர்.எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான பயிற்சி வழங்கவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்