என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hindu religion"
- ஜியார்ஜியா இந்துக்கள், பல வகையில் அம்மாநில வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்
- இந்து மத பங்களிப்புகளை கவர்னர் கெம்ப் நினைவு கூர்ந்தார்
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம் அட்லான்டா.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், "இந்துஃபோபியா" எனப்படும் இந்து மதத்தை குறித்து பொய்யாக அச்சுறுத்தும் வகையில் பரப்பப்படும் பிரசாரத்திற்கு எதிராகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே இத்தகைய ஒரு இந்து மதத்திற்கு ஆதரவான கண்டனம் எழுப்பப்படுவது இதுதான் முதல்முறை.
அத்தீர்மானம் கொண்டு வந்த போது யோகா, தியானம், ஆயுர்வேதம், இந்து மத உணவுமுறை, கர்னாடக இசை மற்றும் கலை உட்பட பல வழிகளில் அமெரிக்கர்களின் கலாச்சாரத்தையும், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்திய இந்து மதத்தின் பரந்த பங்களிப்புகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா ஆளுனர் பிரையன் போர்டர் கெம்ப் (59), சில தினங்களுக்கு முன் ஒரு பிரகடனம் செய்துள்ளார்.
இப்பிரகடனத்தில் ஆளுனர் கூறியிருப்பதாவது:
"ஜியார்ஜியாவில் உள்ள அமெரிக்க வாழ் இந்து சமூகத்தினர், ஜியார்ஜியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இதன் மூலம் இங்கு வாழும் குடிமக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்டோபர் மாதம் இனி "இந்து பாரம்பரிய மாதம்" என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்து கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட இந்து மத ஆன்மிக வழிமுறைகளை அனைவரும் கவனிக்கும் விதத்தில் இந்த கொண்டாட்டங்கள் அமையும்," என்று கெம்ப் தெரிவித்துள்ளார்.
கோனா என அழைக்கப்படும் வட அமெரிக்காவின் இந்துக்களுக்கான கூட்டமைப்பு, ஆளுனரின் இந்த முடிவை வரவேற்று அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது.
ஆனால், கலிபோர்னியா மாநிலத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சாதிகளுக்கு எதிரான மசோதாவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்த அமைப்பு, "கலிபோர்னியா எங்களை (இந்துக்களை)" குறி வைக்கும் நிலையில், ஜியார்ஜியா எங்களுக்கு அங்கீகாரம் தந்திருக்கும் இந்த செயல் மகிழ்ச்சியளிக்கிறது" என தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில்தான் இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளான நவராத்திரி, தீபாவளி ஆகியவை கொண்டாடப்படுகிறது என்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடுக்கி அருகே, கனமழையால் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் தங்கியிருந்தபோது இறந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவரின் உடல் கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மதங்களை கடந்து மனிதநேயம் மலர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலத்தில் சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இடுக்கி மாவட்டம் சித்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிலும் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் தங்கியிருந்த மூணாறு அருகே 2-ம் மைல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 65) என்பவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். மழைவெள்ளம் காரணமாக அவரது உடலை புதைக்க இடம் கிடைக்காமல் அவருடைய உறவினர்கள் தவித்தனர்.
இந்தநிலையில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்காக கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் ஷின்டோ என்பவர் வந்தார்.
அப்போது சுப்பிரமணியனுக்கு இறுதி சடங்கு நடத்தவும், உடலை அடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஷின்டோ விஜயபுரம் கிறிஸ்தவ ஆலய உயர் குழுவிடம் தெரிவித்தார். இதையொட்டி சுப்பிரமணியனின் உடலை இறுதி சடங்கு செய்து அந்த ஆலய வளாகத்தில் புதைக்க இடம் ஒதுக்க அனுமதி கிடைத்தது.
இதையடுத்து சுப்பிரமணியனின் உடல் கிறிஸ்தவ ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தது. பின்னர் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த சுப்பிரமணியனுக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் இறுதி சடங்கு நடத்தி அங்கேயே உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KeralaFlood #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்