என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hindu temples"
- தினசரி தொழுகையின்போது துர்கா பூஜை பந்தல்களுக்கு வங்கதேச அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
- துர்கா பூஜை மண்டல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்குகிறது.
டாக்கா:
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின் போது இங்கு வசிக்கும் இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர். கடந்த சில ஆண்டாக துர்கா பூஜை காலங்களில் இந்துக்கள்மீது தாக்குதல் நடப்பது வழக்கமாக உள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட உள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்தன. துர்கா பூஜையின்போது இந்துக்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வங்கதேச அரசு உத்தரவிட்டது.
துர்கா பூஜை பந்தல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்க உள்ளது என உள்துறை ஆலோசகர் தெரிவித்தார்.
இந்நிலையில், துர்கா பூஜை கொண்டாட உள்ள சில மண்டல்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும். அப்படி தந்தால் மட்டுமே பூஜை நடத்த முடியும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக மண்டல்களின் பொறுப்பாளர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 20-ம் தேதி சில மண்டல்களின் பிரதிநிதிகள் டகோப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். ராணுவக் குழுவுடன் இணைந்து ரோந்து வருகிறோம் என தெரிவித்தனர்.
- இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
- இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது
சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாகும். இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.
இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும்.
சேலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது கோட்டை மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பக்கவுண்டரின் பாடல்கள் அம்மனின் மகிமையை எடுத்து கூறுகின்றன.
சேலம் கோட்டை பெரியமாரியம்மன் அருளே வடிவாக காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள்.
வலது மேற் கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.
அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.
ஆரம்பத்தில் இந்த கோவிலின் கருவறை சிறயதாகவும் மிக அழகிய முறையிலும் அமைந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது. விரைவில் இந்த ஆலயம் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. வாழ்வின் அடித்தளத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை உயர்த்துவதற்காக அன்னை உயரமான கருவறையில் அமர இருக்கிறார். அன்னையின் ஆலயம் வளர வளர சேலம் மாநகர் யாரும் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல் கட்டுமானப் பணி
சேலம் என்றாலே உணவுப்பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ்ம், ஆன்மிகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும் நினைவுக்கு வந்து செல்லும். ஆடி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பண்டிகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் இக்கோயில் களைகட்டும்.
சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன் அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ராஜகோபுரம் தவிர்த்து, கோவிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் கோவிலில் திருப்பணி தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டே இருந்தது. பழமையான மூலவர் அம்மனின் கருவறையை அகற்றாமல் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அம்மன் கருவறை கருங்கற்களால் கட்டப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதற்கான தீர்வுகளுடன் மீண்டும் கட்டுமான பணி சுறுசுறுப்படைந்தது. இந்த நிலையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் 2 வருடங்களாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு கட்டுமானம் நடைபெறாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் கடந்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப்பிரகார மண்டபம் சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.
கருங்கற்களால் கட்டுவதால், கோவிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும். மேலும் கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால், பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துவிட்டன.
தொடர்ந்து, சிமென்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி சுற்றுப் பிரகார மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.
கும்பாபிசேகப் பணிகளின் பகுதியாக ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. கோபுரத்தில் வண்ணம் பூசப்படும் பணிகள் முழுமையாக முடிந்த பின் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, விரைவில் கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டு, தங்கள் இஷ்ட தெய்வமான கோட்டை மாரியம்மனை தரிசிக்கும் ஆவலுடன் சேலம் மக்கள் காத்திருக்கின்றனர்.
கோவில் திருப்பணியில் இடம் பிடித்த கற்கள்
கோவில்கள் இந்திய கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை மற்றும் கல்வி ஆகியவற்றின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. கோவில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் தனித்துவமான இடத்தை பிடிக்கிறது. இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோவில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோவில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக மட்டுமில்லாமல், வரலாறு, சமயம், பரிணாமம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவைகளில் நீங்கா இடம் பிடிக்கிறது.
2017-ம் ஆண்டு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் தவிர்த்து, பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சேலம் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திருக்கோவிலில் புதியதாக விமானத்துடன் கூடிய கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபம் (கருங்கல் பணி) கட்டுதல், கருங்கற்களிலான மகா மண்டபம் கட்டுதல், சுற்றுப்பிரகாரம் மண்டபம் கட்டுதல், எடுத்துக்காட்டு மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள்யாவும் தொல்லியல் வல்லுநர்களின் கருத்துரு அறிக்கையின் அடிப்படையிலும் மண்டல, மாநில மற்றும் உயர்நீதிமன்ற குழுவின் ஒப்புதல்களின் அடிப்படையிலும் ஆணையரின் நிர்வாக அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரத்தின்படியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அருகாமையில் அமைந்துள்ள கோவில்கள் வருமாறு:
500 மீட்டர் தூரத்தில் சுகவனேஸ்வரர் கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் கோட்டை அழகிரிநாதர் கோவில், 7 கி.மீட்டர் தொலைவில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில், 5 மீட்டர் தூரத்தில், குமரகுரு சுப்ரமணியசாமி கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும்.
ஜொலிக்கும் கோட்டை மாரியம்மன் கோவில்
சேலம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் கோட்டை மாரியம்மன் கோவில் வீற்றிருக்கிறது. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிகளும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு கட்டுமானமும் பார்த்து, பார்த்து மிகவும் கவனமாக நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் பல்வேறு கலை நுணுக்கங்களுடன் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மைய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் பிரமாண்டமாக ெஜாலிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்) அன்னதான மண்டபத்தில் உள்ளது. பெண்களுக்கு தனியாக 4 குளியலறைகள் வசதி உள்ளது. குறிப்பாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அருகாமையில் ஈரடுக்கு பஸ் நிலையம் உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவிலுக்கு வருகின்றனர்.
இதோ ஒரு தகவல்
தமிழக முதல்-அமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இத்திருக்கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அன்னதான கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 -01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை செலுத்த விரும்புவோர் குறைந்தது ரூ.100 முதல் செலுத்தலாம். நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.3750 என்ற வீதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் இணையதளத்தில் இ- சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத் தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள், செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், சேலம் மாநகர் என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். பக்தர்கள் வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், பொங்கலிட்டு, அலகுகுத்தி கோவிலுக்கு பயபக்தியுடன் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றனர்.
கோட்டை மாரியம்மன் திருத்தல சிறப்பு
சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.
இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.
இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.
சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்
ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.
ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.
ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.
ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.
புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.
22 நாட்கள் கோலாகல விழா
மாரி வளம் சுரக்க, மக்கள் நலம் பெற்று பசியும் பிணியும் நீங்கி வளமுடன் வாழ ஆடிப்பெருந்திரு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆடி மாதம் 22 நாட்கள் சிறப்புற கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18-ந் தேதியை அடிப்படையாக கொண்டே முக்கிய விழாக்கள் நிர்ணயிக்கப்ப டுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு முந்தைய செவ்வாய்க்கி ழமைகளில் முதல் செவ்வாய் பூச்சாட்டுதலும், 2-ம் செவ்வாய் கம்பம் நடுதலும் நடைபெறுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை சக்தி கரகமும், அதைத்தொடந்து பொங்கல் வைத்தல், உருளுதண்டம் விழாக்களும் நடைபெறும். கடைசி செவ்வாய்க்கிழமை மகா அபிசேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. சேலம் மாநகரில் எட்டுப்பேட்டைகளிலும் உள்ள மாரியம்மன் கோயில்களிலும் ஆடிப்பெருந் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பூப் போட்டு பார்த்தல்
இத்திருக்கோயில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் தீருமா? மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா? தந்தைக்கு வந்திருக்கும் நோய் தீருமா? மகனுக்கு வேலை கிடைக்குமா? போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வெள்ளை, சிவப்பு நிறங்களில் பூக்களைப் பொட்டலங்களாகக் கட்டி அம்மனின் திருவடியில் வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்த்தால், நினைத்த பூ வந்தால், தாம் எண்ணி வந்த செயல் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு செல்வர், இதற்குப் பூப்போட்டு பார்த்தல் என்று பெயர். பக்தர்கள் பூப்போட்டு பார்த்து தம் பிரச்சனைகளைத் தீர்த்து செல்வதுண்டு. நோயால் பீடித்தவர்களும், துயர் கொண்டவர்களும் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கிறார்கள்.
வேண்டுதலும், நேர்த்திக்கடனும்
மதம் என்பது நம்பிக்கை, சடங்குகள், ஐதீகங்கள் ஆகிய 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கை என்கின்றோம். அது ஒன்றின் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் தேவையின் அடிப்படையில் தோன்றியவையாகும் என்பார்கள் அறிஞர்கள். பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தங்கள் குறைகளைப் போக்கும் மகாசக்தியாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். அதனால் தான் தாம் மேற்கொள்ளும் முக்கிய செயல்களுக்கு அம்மனின் இசைவு பெற்றே செயல்படுகின்றனர்.
கண்ணடக்கம் சாத்துதல்
கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ கோட்டை பெரிய மாரியம்மனிடம், தமது கண்ணிற்கு ஏற்பட்ட நோயை நீக்குமாறு வேண்டிக்கொள்வர். அதன் காரணமாக நோய் நீங்கி நலமடைவர். தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மாரியம்மனுக்கு பொன்னாலோ (அ) வெள்ளியாலோ (அ) தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தவார்கள். சில நேரங்களில் திருக்கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு.
கம்பம் நடுதல்
ஒவ்வொரு ஆண்டும் பூச்சாட்டுதலுக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலா மரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி எடுத்து நன்கு சீவப்படும். இறைவன் திருஉருவம் எழுதி அழகிய முறையில் ஒப்பனைச் செய்து மங்கல இசையுடன் திருக்கோயிலை மூன்று முறை வலமாக வந்து பலிபீடத்தின் முன்பு அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும்.
இவ்விழா அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடிவராத இளம்பெண்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்கி திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர். மேலும், மழை வளம் வேண்டி பக்தர்கள் குறிப்பாக பெண்கள் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி மூன்று முறை வலம் வருவர். இதன் நோக்கம், மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே. மாரியம்மனை குளிர வைத்து மழை வளம் பெறுவார்கள்.
- இந்த திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது.
- இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன.
மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது திருவாடானை. இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்றது. தேவாரப் பாடல்களில் 120 பாடல்கள் அதிபலன் கூடியவை. அவற்றில் முக்கியமானது திருஞானசம்பந்தர் பாடிய திரு வாடானை திருப்பதிகம். திருஞான சம்பந்தர், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார் என அத்தனை பேராலும் பாடல்பெற்ற திருத்தலம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தலம். பிரம்மாவின் வழிகாட்டுதல்படி நீலரத்தின மணியால் சூரியன் ஆதிரெத்தினேஸ்வரருக்குப் பூஜை செய்ததால் இதை ஆதிரெத்தினபுரம் என்றும் சொல்கிறது புராணம்.
இத்திருத்தலத்தைச் சுற்றி 64 வகையான மூலிகைகளும் 54 வகையான மலர்களும் உள்ளன. மணிமுத்தாறு, சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், வாருணி தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்களும் திருக்கோயிலைச் சுற்றிலும் உள்ளன. பெரும்பாலும் திருக்கோயில்களில் ஒரே ஒரு தல விருட்சம் தான் இருக்கும். ஆனால், ஆதிரெத்தினேஸ்வரருக்கு பாரிஜாதம், குருக்கத்தி, கடம்பம், வில்வம் ஆகிய நான்கு தல விருட்சங்கள்.
இறைவன், இறைவி
இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரியனால் உருவாக்கப்பட்ட சூரிய புஷ்கரிணி(நீராவி தீர்தம்) தீர்த்தம் கோயிலுக்கு உள்ளேயும், கோவிலுக்கு முன்பு வருணன் தீர்த்தமும் (தெப்பகுளம்), கோவிலுக்கு மேற்கே வாருணி தீர்த்தமும் (மங்கல நாதன் குளம்), கோவிலுக்கு தெற்கே அகத்தியர் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மற்றும் மணிமுத்தாறு(மணிமுத்தா நதி) என்று ஆறு தீர்த்தங்கள் உள்ளன.
வருண பகவானின் மகன் வாருணி சாப விமோசனம் பெற்று முனிவராக பிறப்பெடுத்து உருவான இடம். வாருணியின் மகனே நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன்.இங்குள்ள ஆதி ரத்தின லிங்கத்தை பிரதிஷ்டை செய்தவர் சூரியபகவான், மகாபாரத காலத்திற்கு முன்பு கிருஷ்ணர் ராமராக அவதாரம் எடுத்த பொழுது ராமர் ராவணனுடன் போர் செய்ய போவதற்கு முன்பு இங்குள்ள இறைவனை வணங்கி சிவபெருமானிடம் அதற்கான உபதேசத்தை பெற்றார்.
ராமாவதார காலத்தில் இறைவனிடமிருந்து தான் கற்ற இந்த உபதேசத்தை தனது கிருஷ்ண அவதாரத்தின் போது கீதையாக, கிருஷ்ணன் மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். மார்க்கண்டேயர், காமதேனு, சூரியன், அகத்தியர், திருஞானசம்பந்தர் ஆகியோர் அவரவர் வாழ்ந்த காலங்களில் பல யுகங்களில் தொடர்ந்து இங்குள்ள இறைவனை பலர் வழிபட்டு வந்துள்ளனர்.
நீலரத்தினக்கல் லிங்கம்
என்றும் பதினாறாய் வாழும் வரம் பெற்ற மார்க்கண்டேயன் தனது பெற்றோருடன் வந்து இங்கு தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஆதிரெத் தினேஸ்வரர் லிங்கம் நீலரத்தினக் கல்லால் வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. தேவி, இங்கே சிநேக வல்லி அம்மையாக வீற்றிருக்கிறாள்.
சாபம் நீங்கிய தலம்
துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட தனது மைந்தன் வாருணிக்கு சிவபெருமானிடம் சாப விமோசனம் கேட்கிறார் வருணன். 48 நாட்கள் ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி ஆதிரெத்தினேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வர சாபம் நீங்கும் என்று உபாயம் சொன்னார் சிவபெருமான். அதுபடியே வாருணிக்கு சாபம் நீங்கியதால் இத்திருத்தலத்தை நோய்நொடி தீர்க்கும் திருத்தலம் இன்றைக்கும் துதிக்கப்படுகிறது. இங்குள்ள தலவிருட்சங்களின் வேரிலிருந்து திருமண் எடுத்து உடம்பில் பூசிக்கொண்டாலும் தண்ணீரில் கலந்து பருகினாலும் நோய் நொடிகள் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விழாக்கள்
இக்கோவிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன
- அம்மனை அப்பகுதி மக்கள்,‘துர்க்கம்மா’ என்றும் அழைக்கிறார்கள்.
- இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ளது கட்டீல் என்ற ஊர். இங்குள்ள துர்க்கா பரமேஸ்வரிஅம்மன் கோவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகும். இந்த அம்மனை அப்பகுதி மக்கள்,'துர்க்கம்மா' என்றும் அழைக்கிறார்கள். பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெற இந்த ஆலயத்தில் 'யட்சகானம்'என்ற வழிபாட்டை நடத்துகிறார்கள்.
பழங்காலத்தில் இந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அந்த பஞ்சத்தை போக்குவதற்காக ஜாபாலி என்ற முனிவர்,தவத்தில் ஈடுபட்டார்.அந்த முனிவரின் தவம் சிறப்பானது என்பதால்,இப்பகுதியில் நிலவிய பஞ்சத்தைப் போக்க, தேவலோக தலைவனான இந்திரன் முடிவு செய்தான். அதற்காக தேவலோகத்தில் இருந்து காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்கு சென்று, வளம் சேர்க்கும்படி இந்திரன் அனுப்பி வைத்தான்.ஆனால் கர்மவினைகளால் பல பாவங்களைச் செய்த மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல நந்தினி பசு தயங்கியது.
அந்த பசு,பார்வதியை சரணடைந்து தான் பூலோகம் செல்ல விரும்பவில்லை என்றுகூறியது. அப்போது பார்வதி தேவி, "நீ பசுவாகஅங்கே செல்ல வேண்டாம். அனைத்து பாவங்களையும் நீக்கும் வல்லமைபடைத்த நதியாக மாறி பூலோகம் செல். அத்துடன் உன்னுடைய நீர்த் தன்மையால் அந்தப் பகுதியை பசுமையாக்கு" என்று உத்தரவிட்டார்.அதன்படி 'நேத்திராவதி' என்ற பெயரில் இங்கு நந்தினி பசு, நதியாக ஓடத் தொடங்கியது.
அந்த சமயத்தில் அருணாசுரன் என்றஅரக்கன், பூலோகத்தில் பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்துஉயிர்களைக் காக்கும் படி பார்வதியிடம் முனிவர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படி அரக்கனை வதம் செய்வதற்காக, பார்வதிதேவி மோகினியாக வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கன்,அவளைப் பின் தொடர்ந்தான்.நேத்திராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின்னால், ஒளிவது போல் மோகினி பாவனைசெய்தாள். அரக்கன் அவளைப் பிடிக்க முயன்றான். அப்போது மோகினியாக இருந்த பார்வதிதேவி, வண்டாக வடிவெடுத்து,அவன் உடலுக்குள் நுழைந்து அவனைக் கொன்றார்.
உக்கிரத்துடன் இருந்த பார்வதியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.உக்கிரம் தணிந்த அன்னை,ஆற்றின் நடுவில் 'துர்க்கா பரமேஸ்வரி' என்ற பெயரில் கோவில் கொண்டாள். இவ்வாலயத்தில் உள்ள அம்மன் சிவலிங்க வடிவமாக இருக்கிறார்.அவருக்கு அம்மன் வடிவில் அலங்காரம் செய்கிறார்கள்.
நதியின் மடியில் தோன்றிய இடம் என்பதால்'கடில்' எனப்பட்டது. அதுவே தற்போது'கட்டீல்' என்று அழைக்கப்படுகிறது.கோவிலின் பின்பகுதியில் நேத்திராவதி ஆறு இரண்டாக பிரிந்து கோவிலைச் சுற்றி ஓடுகிறது. நதியின் நடுவில் இருக்கும் காரணத்தால், இந்த ஆலயத்தின் கருவறை எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். இந்த ஆலயத்தில் தீர்த்தம்,வளையல், மல்லிகை,மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மனிதர்களுக்கு ஏற்படும் வெப்ப நோய், குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சினை நீங்க, இத்தல தேவிக்கு இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில், உடுப்பிசங்கரபுரம் மல்லிகை முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.திருமண வரம், குழந்தைப்பேறு, இழந்த பொருள் மீண்டும் கிடைக்க, மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர்.இவ்வாலயத்தில் மகாகணபதி, ரக்தேஸ்வரி, ஐயப்பன், நாகதேவதை, பிரம்மன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
மங்களூருவில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் கட்டீல் பகுதிஉள்ளது.
- இந்த சிவபெருமானுக்கு ‘கங்காதேஸ்வரர்’ என்று பெயர்.
- தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற் கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. இந்தச் சிலையை வடிக்கும் பணியை, திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் படித்த பட்டதாரி மாணவரான பி.எஸ்.தேவதத்தன் என்பவர் செய்தார்.
இந்த சிவபெருமான் சிலை, வழக்கமான சிவன் சிலைபோல் அல்லாமல், வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய பாறையின் மீது அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிலையில், சிவபெருமான் ஒரு காலை தரையில் ஊன்றியும், மற்றொரு காலை சம்மனம் போட்ட நிலையிலும் வைத்திருக்கிறார். தனது இடது கரத்தில் மிகப்பெரிய சூலாயுதத்தை தாங்கியிருக்கிறார். வலது கரத்தை தனது வலது தொடையில் வைத்தபடி இருக்கிறார்.
பொதுவாக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பல சிவன் சிலைகளும், நேருக்கு நேராக தன்னை வழிபட வரும் பக்தர்களை நோக்கியபடியே இருக்கும். ஆனால் இந்த சிலை வாயிலாக அருளும் சிவபெருமான், தன்னுடைய தலையை இடதுபுறமாக திருப்பி, வானத்தை நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். மேலும் அவரது தலையில் இருக்கும் சடைமுடியானது, அவிழ்ந்த நிலையில் அதனுள் இருக்கும் கங்கைதேவி வெளிப்பட்ட நிலையில் இருக்கிறார். இதனால் இந்த சிவபெருமானுக்கு 'கங்காதேஸ்வரர்' என்று பெயர்.
கடற்கரையில் இருந்து 20 அடி உயரத்தில் உள்ள பாறையின் மீது, 58 அடி உயரத்தில் அமைந்த இந்த சிவன் சிலையை உருவாக்கத் தொடங்கியபோது, தேவதத்தனுக்கு 23 வயதுதான். தற்போது 30 வயதைக் கடந்திருக்கும் தேவதத்தன் இந்த சிலையைப் பற்றி சில விஷயங்களை சமூக வலைதளங்களிலும், சில பேட்டிகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் அவர், "இந்தப் பணி என்னிடம் வந்தபோது, என்னுடைய சிறு வயதின் காரணமாக பலருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய பணியின் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது.
கடற்கரை ஓரத்தில் சிலையை உருவாக்கும்போது, கொந்தளிப்பான கடல், கடற்கரை காற்றின் தன்மை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். தற்போது சிலை முழுமையாக முடிந்து, அதனைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வரும்போது, நான் பட்ட கஷ்டங்கள், அனைத்தும் மகிழ்ச்சியாக முன் வந்து நிற்கிறது" என்கிறார்.
- புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது.
- புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு சமீபகாலமாக வெள்ளமென பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆலய தல வரலாறு வருமாறு:-
பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி ஒருவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையை சமாளிக்க அவர் மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பாவம் நிலத்தை அவரால் திருப்பவே முடியவில்லை. கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் வற்புறுத்தினான். கொடுக்க முடியாமல் பொன்மேனி திணறவே, கோபம் வந்தது மகிசுரனுக்கு.
அந்த ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு கட்டளையிட்டான். ஒரேநாளில் இவை அனைத்தையும் செய்வது என்றால் எளிதான காரியமா என்ன? ஆனாலும் அவனால் வேறு என்னதான் செய்ய முடியும்?சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்று சிவன் அருளைப் பெற முடியாமல் போயிற்றே என்று வருந்தியவாறே, பூங்காவனம் சென்றான் பொன்மேனி. தான் எப்போதும் வணங்கி வரும் இஷ்ட தெய்வமான கருமாரியை கரங்கூப்பி வணங்கியவாறு, நிலத்தை அந்த இரவு நேரத்தில் உழத் தொடங்கினான். திடீரென்று அவனது ஏர் கலப்பை ஏதோ ஒன்றில் இடித்தது போலத் தெரிந்தது.
என்ன அது? என்று அவன் கீழே குனிந்து உற்றுப்பார்த்தபோது, அங்கே ரத்தம் பீறிட்டு வழிந்தோடிக் கொண்டிருந்தது. பிசுபிசுவென்று வடிந்த ரத்தம், பின்னர் வேகமாகப் பீய்ச்சுவதைப் பார்த்ததும் பொன்மேனிக்கு கண்கள் இருண்டு, மயக்கம் வந்தது. அப்படியே மயக்கமானான். அப்போது ஒரு அசரீரி குரல் அவன் காதுகளில் விழுந்தது. பயப்படாதே பக்தனே! சற்றுமுன் வயதான பெரியவராக சிவபெருமானும். வயதான மூதாட்டி போல பராசக்தியாகவும் வந்தது நாங்கள்தான். நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.
கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. மாறாக நல்லதையே நீ செய்திருக்கிறாய். அதாவது, இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு நீ என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய் இவ்வாறு அந்த அசரீரி சொன்னது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியினது என்பதைப் புரிந்து கொண்டான்.
அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதனையடுத்து ஊர் முழுவதும் இந்தச் செய்தி காட்டுத் தீயாகப்பரவியது. அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என ஊரார் முடிவு செய்தனர். அப்படியே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்னும் சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புட்லூர் ஆலயத்துக்கு இன்னொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது. ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலை யனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்து களைப் படைந்ததால் வேப்ப மர நிழலில் கர்ப்பிணியாக இருந்த பார்வதி அமர்ந்தாள். தாகமாக இருப்பதால் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் அருகில் இருந்த கூவம் நதியை தாண்டி சென்று புனிதநீர் எடுத்து வந்தார். அந்த சமயத்தில் பலத்த மழை பெய்து கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சிவபெருமானால் நதியை கடந்து வர இயலவில்லை. எனவே வெள்ளம் குறையட்டும் என்று சிவன் காத்திருந்தார். இதற்கிடையே பசி-தாகத்துடன் இருந்த பார்வதி அப்படியே தரையில் விழுந்து விட்டாள். அவளை சுற்றி மண் குவிந்து புற்றாக வளர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கு திரும்பி வந்த சிவபெருமான், புற்றுக்குள் பார்வதி அமர்ந்து விட்டதை அறிந்து அங்கேயே நின்று விட்டார். அதை பிரதிபலிக்கும் வகையில் புட்லூர் தலத்தில் சிவபெருமான், தாண்டவ ராயன் அம்சமாக சற்று கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம்.
புட்லூர் தலத்தில் பரமேஸ்வரி அமர்ந்த புற்று தற்போதும் வளர்ந்தபடி உள்ளது. இத்தல நாயகி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறாள். தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங் களை விரட்டுகிறாள். சிலருக்கு அவள் பாம்பாக காட்சி கொடுக்கிறாள். சிலருக்கு மூதாட்டியாக காட்சி கொடுக்கிறாள். மேலும் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போல அம்மனே இத்தலத்தில் இயற்கையாக தோன்றி உள்ளாள். இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவேதான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது.
புட்லூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவிலில் உள்ளே கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக மல்லாந்தவாக்கில் பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறாள். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னை ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்து மல்லாந்து இருக்கிறாள். அந்த சன்னதியில் கால் வைத்த மறு வினாடி எல்லா பக்தர்களுக்கும் உடம்பில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுகிறது.
மண்புற்று மாதாவுக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம்பழ மாலைகளுடன் ஏற்றமான பூ அலங்காரங்களுடன் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள். சந்நதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேம்பு இருப்பதை பார்க்கலாம்.
அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் இன்னொரு மண்புற்று, உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அழுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படு கிறது. இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. இந்த அம்மனின் சந்நிதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும், தடைகள் விலகும், பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் சேரும் என்பது இவள் அற்புதம் அறிந்த மக்களின் மனதில் இருக்கும் மாறாத நம்பிக்கையாகும்.
இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. ஆடி மாதம் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்த வழிபாடு செய்வார்கள். ஆடி மாதம் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும். மேலும் கர்ப்பமாக உள்ளபெண்கள் ஆடி மாதம் இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்தால் பிரசவத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஆடி மாதம் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நம் வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
குழந்தை வரம் கிடைக்கும்
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை; மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.
- இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
- ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.
அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்தி களின் வேண்டுகோளுக்கிணங்க மாயா சூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இக்கோவில்.இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இக்கோவில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.
ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது செழிப்பை யும், வளத்தையும் உணர்த்து வதாகக் கூறுவர். கோவில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்று களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோவிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோவிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.
திருவிழாக்கள்
தைப்பூசத் திருவிழா, பூச்சொரி தல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறாள்.
தேர்த்திருவிழா மகிமை
பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தை குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் இன்பதிருவிழா என்றே கூறலாம். இவ்விழாவில் கொடியேற்று விழா, வானறு பாடகள் திருவிழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் இத்தகைய வைபவங்கள் மிகச்சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்திபெற்றது என கூறப்படுகின்றது.
அன்று காலை 10 மணிக்கு அம்பாள் கோவிலில் இருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேருகிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்பாள் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதேதுவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்கு நோக்கி புறப்படும் திருத்தேர், ஊரின் முக்கிய வீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
இத்தருணத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அம்பாளின் அருளை பெற பல ஊர்களில் இருந்தும் அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர் பவனி மேற்கு வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் கோவிலின் திருவீதி முன்பு திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கிறது. இரவு 10 மணி வரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்பாள் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரை விட்டு இறங்கி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள்.
அம்பாளை நேரடியாக சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் திருத்தேர் உலா மூலம் தாங்கள் காணத்துடித்த அம்மனை நேரடியாக கண்டு அருள்பெறும் வாய்ப்பினை பெறுகிறார்கள். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள். முதியவர்கள். இயலாதோர் மற்றும் பிறர் அம்பாளின் அருளை பெற இத்திருத்தேர் திருவிழா மிகச்சிறந்த வாய்ப்பினை தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்து யிருடன் தங்கள் இல்லம் நோக்கி செல்கின்றனர்.
அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனி வரும் அம்பாள் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எந்தவித பேதமும் இன்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆம்னா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுகூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன்வழி அறியப்படுகின்றது.
தலவிருட்சம் வேப்பமரம்
மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்ப மரமாகும். சுமார் 1,000 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் இம்மரம் தற்பொழுது காப்பு விண்ணப்ப சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மையிடமாக திகழ்கிறது.அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்பொழுது தல விருட்சத்திற்கு பூஜைகள் நிகழ்த்துவது வழக்கமான ஒன்றாகும். வேப்பமரம் என்றாலே அது மகமாரியின் மறு பிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்தி கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில்நிலைப்பெறுடையதாக கருதப்படுகிறது.
பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இந்த வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத்திருமேனி எடுக்கப்பட்டது. தற்பொழுது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறாள். நலன் பயக்கும் வேப்ப மரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்தில கத்திற்கும் தொடர்பு படுத்தி கூறுவர். எனவே சிறப்பு பெற்ற இத்தல மரம் இன்றும் பக்தர்களுக்கும் பொதுமக்களு க்கும் பெரிதும் பயன்பாடு கொண்டதாக போற்றி வணங்கப்படுகிறது.
தானத்தில் சிறந்தது அன்னதானம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ" "பசித்தோர் முகம் பார் பரம் பொருள் அருள்கிட்டும்" என்ற வாக்கிற்கேற்ப தானத்தில் சிறந்த அன்ன தானத்திற் கென தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நன்கொடை யாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதான திட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் 23.3.2002 முதல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாய் அனைவராலும் பாராட்டப்படும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்கென திருக்கோவிலில் அன்னதான உண்டியல் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த அன்னதான திட்டத்திற்கு பெறப்படும் நன்கொடைகள், உபயங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்கென பேணப்பட்டு வரும் தனிக்கணக்கில் சேர்க்கப்பட்டு இத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் வகையில் நன்கொடை வழங்க விரும்பும் ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் நன்கொடையாளர்கள் ஆகிய அனைவரும் இத்திரு க்கோவிலுக்கு நன்கொடை வழங்கலாம். இத்திட்டதிற்கு செலுத்தப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு பெறும் வசதியும் உள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் புகழ் பெற்ற ஓவியங்கள்
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால், 2010-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ந்தேதி குட முழுக்கு நடத்தப்பட்டது. குட முழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம் உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது.
இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி, அபிராமி, மகாலட்சுமி, பிரத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.
தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு தென் மாவட்ட ங்களில் இருந்தும், டெல்டா மாவட்ட ங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோவிலை வந்தடையலாம்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1 டோ ல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானை க்காவல், நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.
சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை போன்ற வட மாவட்ட ங்களில் இருந்து வருபவ ர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோவி லுக்கு வந்து சேரலாம்.
தொடர்பு முகவரி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621112.
தொலைபேசி எண்
0431- 2670460
- கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன்.
- நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.
கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.
ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக்காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேட்டையும் கட்டி காப்புத் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.
ஆலயத் தோற்றம்
கோவன்புத்தூரின் காவல் தெய்வமாக அமைந்த சக்திதான் கோனியம்மன். நமது செந்தமிழ்நாட்டிலே ஓரிடத்தில் பத்து குடிசைகள் சேர்ந்தாற்போல் அமைந்தாலும் அந்த இடத்தில் ஒரு மண்மேடை கட்டி அதன் மீது கூரை வேய்ந்து நடுவில் மண் திட்டில் ஓர் பிம்பத்தை அமைத்து தெய்வமாக தொழுவதும், அரசும் - வேம்பும் சேர்ந்து மரமாக வளர்ந்த நிழலில் கல்நட்டு தெய்வமாக வழிபடுவதும் நம் முன்னோர் வகுத்த வழியாகும்.
இவ்வாறு தான் காடு திருத்தி மக்கள் வாழும் நிலமாக பண்படுத்தியபோது இருளர் தலைவனான கோவன் தங்கள் குடிசைக்கருகில் வடபாகத்தில் சிறு கோவில் ஒன்றெடுத்து ஒரு கல் நட்டு தானும் தன் இனத்தார்களும் குலதெய்வமென வழிபட்டு விழாசெய்தும் கொண்டாடினான். இக்கோவில் கோயம்புத்தூருக்கு வடக்கில் துடியலூருக்கு செல்லும் வழியில் சங்கனூர் பள்ளத்தருகே இருந்து பாழடைந்தது. மக்கள் இதனை கோனியம்மன் பழைய கோவில் எனக் கூறுகின்றனர்.
பல்லாண்டுக்குபின் இளங்கோசர் கொங்கு நாட்டினை ஆண்ட காலத்தில் சேரர் படையெடுத்தால் தடுக்க ஒரு மண்கோட்டையையும், மேட்டையும் புதிதாக கோவன் புத்தூரிலே கோசர்கள் கட்டினார்கள். அங்ஙனம் கட்டிய கோட்டைக்கு காப்பு தெய்வமாகவும் தன் பெயர் விளங்கும் வண்ணமும் சிறு கோவில் ஒன்றெடுத்து அதில் வைத்து வணங்கிய தெய்வத்துக்கு கோனியம்மன் என பெயரிட்டு கோவில் கொள்ள செய்தனர். அக்கோவிலே தற்போது கோவை மாநகரின் நடுவில் விளங்கும் கோனியம்மன் கோவில் ஆகும்.
தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்
சிவன், பெருமாள், முருகன் என அனைத்து கோவில்களிலும் நவக்கிரகங்கள் சன்னதி தனியாக இருக்கும். கிரக தோஷம் நீங்க பக்தர்கள் நவக்கிரகங்களை வலம் வந்து விளக்கேற்றி வழிபடுவர். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் நவக்கிரக சன்னதி உள்ளது. மற்ற கோவில்களில் நவக்கிரக சுவாமிகளும் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரக சுவாமிகள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும்.
கிருத்திகா ரோகினி உடனமர் சந்திரபகவான், சுகீர்த்தி உடனமர் சுக்கிர பகவான், ஞானதேவி உடனமர் புதன் பகவான், சித்திரலேகா உடனமர் கேதுபகவான், சக்திதேவி உடனமர் செவ்வாய் பகவான், ஹிம்ஷிகா தேவி உடனமர் ராகுபகவான், சனி நீலாதேவி உடனமர் சனீஷ்வரபகவான், உஷா பிரத்யுஷா உடனமர் சூரியபகவான், தாராதேவி உடனமர் குருபகவான் என சுவாமி சிலைகள் உள்ளன.
இங்கு நவக்கிரகங்கள் மகிழ்ச்சியான நிலையில் அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு மகிழ்ச்சி நிலையில் இருக்கும் சுவாமிகளை வழிபட்டால் நாம் நினைத்து வழிபட்டது நடக்கும், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். திருமண தோஷம் உள்ளவர்களும் இந்த நவக்கிரகங்களை வலம் வந்து பலன் பெறுகிறார்கள்.
வியாழன், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபடுவர். நவக்கிரக சன்னதி களில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார்கள். இங்குள்ள சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏழுநிலை ராஜகோபுரம்
2008 ஆம் ஆண்டு இத்திரு க்கோயிலின் நுழைவாயிலில் 83 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன. திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய ராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.
ஆதிகோனியம்மன் பின்னணி தகவல்கள்
கோனியம்மன் ஆலயத்தின் பின்பகுதியில் ஆதிகோனியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதியில் துர்க்கையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். சப்தமாதர்களும் உள்ளனர்.
இவர்களுக்கு அருகில் உக்கிர வீரபத்திரர், கருப்பர், முனீஸ்வரரும் உள்ளனர். இந்த சன்னதியில் பக்தர்களை மிகவும் கவர்வது ஆதி கோனியம்மன் விக்ரக மாகும். இங்கு ஆதி கோனியம்மனுக்கு தலை மட்டுமே உள்ளது. உடல் இல்லை. இதன் பின்னணியில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. கோவையில் கோசர்கள் கோனியம்மனை வழிபட்டு வந்த காலக்கட்டத்தில் அதற்குரிய மூலவரை உருவாக்கி வைத்திருந்தனர்.
அவர்களுக்கு பிறகு கோவை நிலப்பகுதியை ஆண்ட மைசூர் மன்னர்கள் கோனியம்மனை மகிஷாசூரமர்த்தினியாக வடிவமைத்து வழிபட்டனர். இந்தநிலையில் திப்புசுல்தான் படையெடுத்து வந்து கோவை யில் உள்ள ஆலயங்களை எல்லாம் சூறையாடினான். அப்போது இந்த தலமும் பலத்த சேதத்தை சந்தித்தது. சிலைகளில் பெரும்பாலானவை உடைக்கப்ப ட்டன.
மகிஷாசூரமர்த்தினி சிலையும் திப்புசுல்தான் படைகளால் உடைக்கப்பட்டது. அப்போது சிலையின் தலையும் உடலும் இரண்டு துண்டாக உடைந்தது. தலையை இந்த தலத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
உடல் பகுதி மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. தலை இல்லா முண்டத்தை அங்குள்ளவர்கள் இன்றும் வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள்
ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாலையில் கோவில் காலம் நிறைவு எய்திய பின்னர் கோனியம்மன் உற்சவரை கேடயத்தில் அழகுற எழச்செய்து கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும். அதுபோலவே பவுர்ணமி தோறும் கோனியம்மன் உற்சவர் கோவிலுக்குள் புறப்பாடு செய்யப்படும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் இருக்கும் அம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்வர். ஆடி மாதம் முழுவதும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் கொலு இருக்கும். நவராத்திரி உற்சவத்தின்போது அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமாக அலங்காரம் செய்விக்கப்பட்டு பக்தர்கள் மனம் நிறைவுறும் வண்ணம் கோனியம்மன் மூலவரும் உற்சவரும் காட்சி தருவர்.
இது தவிர கீழ்கண்ட உற்சவங்களும் இத்திருக்கோவிலில் சிறப்புற நடைபெறுகின்றன.
1. ஆடிவெள்ளிக்கிழமை 2. தை வெள்ளிக்கிழமை 3. நவராத்திரி 4. மாதப்பிறப்பு 5. பவுர்ணமி பூஜை 6. அமாவாசை 7. கார்த்திகை 8. தீபாவளி 9. தனுர் மாத விழா 10. தை பொங்கல்.
கோனியம்மன் கோவிலில் நிச்சயதார்த்தம்
கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.
இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.
கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.
இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சி யான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.
கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சய தார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.
மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.
கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பூ போட்டு உத்தரவு கேட்கும் பக்தர்கள்
கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.
தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம்
இத்திருக்கோவிலில் 23-3-2002 முதல் தமிழக அரசு அறிவித்துள்ள அன்னதான திட்டத்தின்கீழ் தினமும் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டியில் இருந்து வருடம் ஒரு நாளைக்கு தாங்கள் விரும்பும் நாளில் தங்கள் பெயரில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வருமான வரிசட்டம் 80(ஜி)-ன் கீழ் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என மறைநூல்கள் கூறுகின்றன. அன்பர்கள் இச்சீரிய அன்னதான திட்டத்தில் தாங்களும் பங்கு கொண்டு ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தும் தங்கள் பிறந்த நாள், தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் ரூ.3,500 திருக்கோவிலில் செலுத்தி குறைந்தது 100 பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கி அருள்மிகு கோனியம்மன் அருளுக்கு பாத்திரர் ஆகும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்கொடைகளை வங்கி வரைவோலை மற்றும் பணிவிலை மூலமாகவும் அனுப்பலாம்.
முகவரி, நிர்வாக அதிகாரி, அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் அன்னதான நிதி, கோயமுத்தூர் 641 001.
கோவில் நடை தினந்தோறும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். பின்னர் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
காலை 6.30 மணி-நடைதிறப்பு
காலை 7 மணி-காலசந்தி பூஜை
நண்பகல் 12 மணி -உச்சிகால பூஜை.
பகல் 12.30 மணி -நடைசாத்துதல்
மாலை 4.30 மணி -நடைதிறப்பு
மாலை 7 மணி-சாயரட்சை பூஜை,
இரவு 8.30 மணி-நடை சாத்துதல்.
பூஜை கட்டண விவரம்
அர்ச்சனை சீட்டு - ரூ.5
தேங்காய் சீட்டு - ரூ.5
மாவிளக்கு சீட்டு- ரூ.20
உபய கட்டணச்சீட்டு - ரூ.20
தனி வழி தரிசனம்- ரூ.25
பால் அபிஷேகம் சீட்டு- ரூ.25
குத்துவிளக்கு சீட்டு - ரூ.50
விசேஷ நாட்கள் தனி வழி - ரூ.50
ஆட்டோ, ஸ்கூட்டர் பூஜை- ரூ.50
கார் பூஜை சீட்டு - ரூ.100
அபிஷேக சீட்டு - ரூ.100
புகைப்படம் எடுத்தல் - ரூ.150
ஜமுக்காளச்சீட்டு - ரூ.200
திருவிளக்கு வழிபாடு சீட்டு- ரூ.250
உப்பு ஜவுளி - ரூ.500
வீடியோ எடுத்தல் சீட்டு- ரூ.500
தங்கப்பாவாடை சீட்டு- ரூ.1000
கோவில் தொடர்புக்கு
செயல் அலுவலர்,
அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்,
பெரியகடை வீதி,
கோவை-641 001.
தொலைபேசி எண்: 0422-2396821.
website: www.kovai.koniamman.org, Email-ID: koniamman@bsnl.in
- தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள்.
- கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்
ஆடி மாதம் பிறந்து விட்டது. தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் அம்மனின் அருள் மழை நிறைந்து இருக்கும். இந்த மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டால், அனைத்து சக்திகளையும் ஒருங்கே வழிபட்டதாக ஐதீகம். சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில்.
நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக குடியிருந்தாள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் கால கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்து விட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்பு செட்டித் தெருவிற்கு இடம் மாறினாள். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐ.பி. பக்தர்தான் சத்ரபதி சிவாஜி. 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார். "யாதுமாகி நின்றாய் காளி" என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான். சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள். கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாகவும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.
பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள். ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம். ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.
அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். நம் அன்னை வரப்ரதாயினி. ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும். உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள் ஆவாள் அம்பாளைப் பார்க்கும் போது, அவள் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பது போலவே இருக்கும். அன்னை காளிகாம்பாள் தலத்திலும் இதை நாம் உணரலாம்.
காளிகாம்பாளும் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும்.
கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள்.
இத்தகைய சிறப்புடைய காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி பெரு விழாவில் 9 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி அளவில் உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 ஞாயிற்றுக்கிழமைகளில் வித விதமான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு காளிகாம்பாளுக்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு அமாவாசை அன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ விராட் விஸ்வ பிரம்மத்திற்கு விசேஷ பூஜையும், கூட்டு வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ வீர பிரம்மங்கார் சுவாமிகளுக்கு விசேஷ பூஜை நடைபெறும்.
- மிகவும் பிரபலமானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில்.
- இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.
அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.
7 கன்னியர்கள் போரிட்டனர் : இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர். இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.
ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.
தவக்கோலத்தில் தேவி : தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.
வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள். தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள்.
அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.
சூரன் வதம் : அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள்.
வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள்.
மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அன்னை கன்னியாகுமரி கோவில் வந்து தவக்கோலம் அடைந்தாள்.
அன்று முதல் இன்று வரை கன்னியாகுமாரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்து கொண்டு மக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.
கோவிலுக்கு செல்லும் வழி: நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 240 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரி அமைந்துள்ளது.
- இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை.
- இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறை என்ற இடத்தில் அமைந்த புண்டரீகாட்ச பெருமாள் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.
மூலவர்: புண்டரீகாட்சன் (செந்தாமரைக் கண்ணன்)
தாயார்: செண்பகவல்லி
உற்சவர்: பங்கஜவல்லி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், வராக தீர்த்தம், கந்த தீர்த்தம், பத்ம தீர்த்தம்.
* இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை. விழாக்காலங்களில் கூட தாயார் முன் செல்ல, பெருமாள் அவரைப் பின்தொடர்வார். மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும், பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு.
* தனிச் சன்னிதியில் செங்கமலவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள், அதாவது பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருள்வார்கள்.
* திருவெள்ளறையில் வாழ்ந்த புண்டரீகன் என்ற யோகி, தான் வைத்த நந்தவனத்தில் வளர்ந்த துளசியைக் கொண்டு பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன் என்பதால் இத்தல இறைவனுக்கு 'புண்டரீகாட்ச பெருமாள்' என்று பெயர்.
* இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது. இந்த பலிபீடத்தின் முன் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து, பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.
* இந்த ஆலயத்தில் 'உத்தராயன வாசல்', 'தட்சிணாயன வாசல்' என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.
கருவறை தெய்வங்கள்
* கருவறையில் பெருமாளின் மேற்புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் இருந்து சாமரம் வீசுகின்றனர்.
* பெருமாளின் இரு பக்கமும் கருடனும், ஆதிசேஷனும் மனித வடிவில் நின்றபடி இருக்கிறார்கள்.
* நடுநாயகமாக மூலவர் பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக ஒரே சிம்மாசனத்தில் உற்சவரான செந்தாமரைக் கண்ணனும், பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.
* பெருமாளின் காலடியில் இடது பக்கம் பூமாதேவியும், வலது பக்கம் மார்க்கண்டேயரும் அமர்ந்து தவம் புரிகின்றனர்.
படி தத்துவம்
* இத்தல பெருமாளை தரிசிக்க முதலில் 18 படிகளை கடக்க வேண்டும். அது பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது.
* அதன்பிறகு 4 படிகள் வரும். அது நான்கு வேதங்களை குறிக்கிறதாம்.
* அதைத் தொடர்ந்து 5 படிகள் வரும். அது பஞ்சபூதங்களை குறிப்பதாகும்.
* பின்வரும் 8 படிகள், 'ஓம் நமோ நாராயணா' என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கும்.
* அதன்பிறகான 24 படிகள், காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிப்பதாகும்.
* மேற்கண்ட படிகளைக் கடந்த பிறகே பெருமாளை தரிசிக்க முடியும்.
* திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், இது 4-வது தலம்.
* 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளது. எனவே இதற்கு 'வெள்ளறை' என்று பெயர்.
* திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரங்கத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.
- இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.
- சுக்கிரதிசை, சுக்கிர புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 199-வது தலமாகும். பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் 9-வது தலம்.
மூலவர்: ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானைநாதர்
அம்மன்: சிநேகவல்லி, அன்பாயிரவல்லி
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம், வருண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், காமதேனு தீர்த்தம்.
வருண பகவானின் மகனான வாருணி, துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தான். அதனால் அவனை ஆட்டின் தலையும், யானை உடலுமாக மாறும்படி துர்வாசர் சாபமிட்டார். அந்த சாபம் நீங்குவதற்காக திருவாடானை வந்த வாருணி, இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெற்றான். ஆடு + ஆனை என்பதே 'திருவாடானை' என்றானது.
இங்குள்ள சோமாஸ்கந்தமூர்த்தியை, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் நிறுவியதாக சொல்லப்படுகிறது. ஈசனை வேண்டி பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் அர்ச்சுனன். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவன் அறியவில்லை. அதை அறிவதற்காக இத்தலம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் கற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றியாகவே சோமாஸ்கந்த மூர்த்தியை நிறுவினான்.
சூரியனுக்கு தன்னுடைய பிரகாசமான ஔியால் கர்வம் உண்டானது. அந்த ஆணவத்தால் தன்னுடைய ஒளியை, சிவபெருமானின் முகத்தில் பாய்ச்சினான். அப்போது அந்த ஒளியை நந்தி உள்ளிழுத்துக்கொண்டார். இதனால் ஒளியை இழந்த சூரியன், நந்தியை வேண்டினாா். நந்திேயா, திருவாடானை இறைவனை வேண்டும்படி சொல்ல, நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டு, தன் ஒளியை மீண்டும் பெற்றார், சூரிய பகவான்.
இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.
ஆதி என்னும் பெயர் கொண்ட சூரியன், நீல ரத்தினக்கல் கொண்டு ஆவுடை அமைத்து வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'ஆதிரத்தினேஸ்வரர்' என்று பெயர். இவர் உச்சிகாலத்தில் நடைபெறும் அபிஷேகத்தின் போது, நீல நிறத்தில் காட்சியளிப்பார்.
திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள், தங்களுக்கான பரிகாரத்தை இந்த ஆலயத்திற்கு வந்து செய்து கொள்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் அமைந்த 9 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், 130 அடி உயரம் கொண்டது.
இத்தல இறைவனை சூரியன், அகத்தியர், மார்க்கண்டேயர், காமதேனு ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.
இந்த ஆலயத்தில் வைகாசி வசந்த விழா 10 நாட்களும், ஆடிப்பூரத் திருவிழா 15 நாட்களும் விமரிசையாக நடைபெறும். அதே போல் நவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி வழிபாடுகளும் சிறப்பாக நடத்தப்படும்.
இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால், முன்வினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுக்கிரதிசை, சுக்கிர புத்தி நடப்பவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம்.
மதுரையில் இருந்து தொண்டி செல்லும் வழியில் 100 கிலோமீட்டர் தொலைவில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருத்தலத்தை அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்