என் மலர்
நீங்கள் தேடியது "hockey"
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
- 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது.
15-வது உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். மற்ற 4 அணிகள் 2-வது சுற்று மூலம் முன்னேறும்.
ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது.
இந்திய அணி 3-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் வேல்சை நாளை (19-ந் தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி கால் இறுதியில் நுழைய வேல்சை கண்டிப்பாக அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி ஸ்பெயினிடம் தோற்க வேண்டும். ஸ்பெயின்- இங்கிலாந்து மோதும் ஆட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இந்த பிரிவில் இங்கிலாந்து, இந்தியா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னேறி இருக்கிறது. ஸ்பெயின் ஒரு வெற்றியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. வேல்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
'சி' பிரிவில் இருந்து நெதர்லாந்து அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
- நியூசிலாந்து ‘லீக்’ சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது.
- நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து- தென் கொரியா (இரவு 7 மணி) மோதுகின்றன.
15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தென் கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, தென் கொரியா ஆகியவை 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன. கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சையும், 9-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருந்தது.
அர்ஜென்டினாவுடன் 3-3 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஸ்பெயினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
ஸ்பெயின் அணி 'லீக்' சுற்றில் 0-2 என்ற கணக்கில் இந்தியாவிடமும், 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்று இருந்தது. வேல்சை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2-வது சுற்றில் மலேசியாவை தோற்கடித்தது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதியில் பெல்ஜியம்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் தோல்வி அடையவில்லை. அந்த அணி தென் கொரியாவை 5-0 என்ற கணக்கிலும், 7-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.
அந்த அணி நியூசிலாந்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.
நியூசிலாந்து 'லீக்' சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது. நெதர்லாந்து (0-4), மலேசியாவிடம் (2-3) தோற்று இருந்தது. 2-வது சுற்றில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது.
நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஜெர்மனி (மாலை 4.30 மணி), நெதர்லாந்து- தென் கொரியா (இரவு 7 மணி) மோதுகின்றன.
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை பெண்கள் அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
- விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
சிவகங்கை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை மாவட்ட ஹாக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு வென்றது. இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளியில் இந்த அணியின் 18 மாணவிகளுக்கும் மற்றும் முரளி, கருணாகரன், மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சங்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தர மாணிக்கம், செயலாளர் யுவராஜா, சிவகங்கைச் சீமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைக்கண்ணன், சிவகங்கை அரிமா சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் தலைவர் முருகன், வெங்கடேஸ்வரா ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
- இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
- லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சென்னை:
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும்.
இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் சென்னைக்கு வரத் தொடங்கினர். அவர்களுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டு அணியை சார்ந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
- முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
சென்னை:
ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வருகிற 12-ந் தேதி வரை ஹாக்கி திருவிழா நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்தது. இரு அணிகள் மோதிய 7 போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறை யாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.
முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 3 முறை சாம் பியனான பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற போராடும். இதனால் இந்தப் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
- ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.
இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.
இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.
தொடர்ந்து, இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.
இதனை தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமம் ஆனது.
- 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- 7வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.
12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளில் மூன்று ஆட்டங்கள் நடந்தன. இதில், தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
2ம் நாளில், மூன்று லீக் ஆட்டங்கள் நடந்தன. முதலில் நடந்த தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது.
3ம் நாளான நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில், 4 மணிக்கு தொடங்கிய 7வது லீக் ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.
- 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜப்பான் அணிகள் மோதின.
- ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி சமன் ஆனது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.
4ம் நாளான இன்றைய ஆட்டத்தில், முதலில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.
இதைதொடர்ந்து, இன்று மாலை 6.15 மணிக்கு 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜப்பான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன.
இதனால், ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி சமன் ஆனது.
- இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.
- தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், 5ம் நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. இதன்மூலம், போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.
இதைதொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன்மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணிக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.
தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.
லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் உத்தர பிரசேதம் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
- 2-வது பாதி ஆட்டத்தில் தமிழக அணி 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஆக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 28 அணிகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது.
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. அரியானா (ஏ பிரிவு), தமிழ்நாடு (பி), கர்நாடகா (சி), பஞ்சாப் (டி), மணிப்பூர் (இ), ஜார்க்கண்ட் (எப்), உத்தரப்பிரதேசம் (ஜி), ஒடிஷா (எச்) ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், அசாம், தத்ரா நகர் கவேலி, பீகார், மராட்டியம், உத்தரகாண்ட் , பெங்கால், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர், ஆந்திரா, கோவா, புதுச்சேரி, ராஜஸ்தான், கேரளா, டெல்லி, தெலுங்கானா, அருணாசலப் பிரதேசம் ஆகிய அணிகள் வெளியேறின.
9-வது நாளான இன்று காலிறுதி போட்டிகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடந்த காலிறுதி ஆட்டத்தில் கர்நாடகா- ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
இதில் கர்நாடகா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கர்நாடகா அணிக்காக ஹாரிஸ் முதாகர் 2 கோலும் (46 மற்றும் 49-வது நிமிடம்) கேப்டன் ஷேசே கவுடா (23-வது நிமிடம்), லிகித்பிம் (32-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஜார்க்கண்ட் அணியில் தில்பர் பர்லா 39-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அடுத்து நடைபெற்ற கால் இறுதியில் தமிழ்நாடு- உத்தர பிரதேசம் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. 27-வது நிமிடத்தில் மனிஷ் சகானியும், 30-வது நிமிடத்தில் சுனில் யாதவும் அந்த அணிக்காக கோல் அடித்தனர்.
2-வது பாதியில் தமிழக வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 33-வது நிமிடத்தில் சுந்தரபாண்டி முதல் கோலை அடித்தார். 52-வது நிமிடத்தில் கேப்டன் ஜோசுவா பெனடிக்ட் வெஸ்லி 2-வது கோலை அடித்து சமன் செய்தார். இதனால் 2-2 என்ற நிலை ஏற்பட்டது.
59-வது நிமிடத்தில் தமிழகம் 3-வது கோலை அடித்தது. கேப்டன் வெஸ்லி இந்த கோலை அடித்தார்.
ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தமிழக அணி அரை இறுதியில் அரியானா அல்லது ஒடிசாவை சந்திக்கிறது.
- முதல் நான்கு போட்டிகளிலும் 1-5, 2-4, 1-2, 1-3 என இந்தியா தோல்வியடைந்திருந்தது.
- இன்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் 2-3 எனத் தோல்வியடைந்தது ஒயிட்வாஷ் ஆனது.
இந்திய ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது. முதல் நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1-5, 2-4, 1-2, 1-3 எனத் தோல்வியடைந்திருந்தது.
இந்த நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எப்படியாவது ஒயிட்வாஷ் ஆவதை தடுக்க இந்தியா முயற்சித்தது. இருந்த போதிலும் 2-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்திய அணி கேபடன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியா 20-வது, 38-வது மற்றும் 53-வது நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது. 53-வது நிமிடத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நேரத்தில் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. என்றபோதிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
- ஒடிசா ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழ்கிறது.
- தங்களது ஸ்பான்சர்ஷிப்பை ஒடிசா மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்தது.
புவனேஸ்வர்:
இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இதற்கிடையே, ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டித்தது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்-பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.