என் மலர்
நீங்கள் தேடியது "Hocky Player"
- இந்திய அணியில் பங்கேற்ற கோவில்பட்டி ஆக்கி வீரர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா சார்பில் நடைபெற்றது.
- நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
இந்தோனேசியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இதில் கோவில்பட்டி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் கார்த்தி செல்வம் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக விளையாடினர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் பள்ளித் தாளாளர் நாகமுத்து தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மூத்த துணைத்தலைவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி முதல்வர் மலர்க்கொடி வரவேற்று பேசினார். பள்ளி சார்பில் மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் செல்வம், ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இருவரையும் பாராட்டி பள்ளி தாளாளர் நாகமுத்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார். பள்ளி மாணவர்களுடன் சர்வதேச வீரர்கள் இருவரும் கலந்துரையாடி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குருசித்ர சண்முகபாரதி, காளிமுத்து, பாண்டியராஜா,
உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன், ஜெய்கணேஷ், முருகன், சந்தனராஜ், வேல்முருகன், உதயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.