search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holycross Engineering College"

    • தூத்துக்குடி மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி 15 -ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
    • புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ராபின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி 15 -ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ஆர். பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் வக்கீல் டி.எஸ். கே. ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். சாயர்புரம் சேகர குரு மனோகர் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியா ரெவெரென்ட் மெர்சி பத்மாவதி சிறப்புரை யாற்றினார்.

    விழாவில் புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ராபின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவி களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ராஜ்குமார் பேசம் போது, ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியின் சிறப்புகளையும், கல்விப் பணியில் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் கல்லூரி புரிந்து வரும் சாதனைகளையும் விளக்கினார்.

    விழாவில் பரியா பிரகாஷ் ராஜ்குமார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி நன்றி கூறினார்.

    ×