என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "homeopathy"
- தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
- தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.
சென்னை:
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.
2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் இன்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்து 58 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை மிகவும் ஆர்வமுடன் எழுதினார்கள்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.
மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
அவ்வாறு 1.30 மணிக்குள் வந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பிறகு வருகை தந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், கைப்பை, பிரேஸ்லெட், செல்போன், மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்சுகள், கைக்கடிகாரம், நகைகள், உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஷூ அணிந்து வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எளிதில் தெரியும் படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.
மேலும் முறைகேடுகளை தடுக்க தேர்வு அறையில், தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
- ராமநாதபுரத்தில் சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.
- ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஆயிர வைசிய மகா ஜன சபை மற்றும் ஆரோக்கியா ஓமியோ கேர் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆயிர வைசிய மகாஜன சங்க பொதுச் செயலாளர்கள் ஜெயக்குமார், நாகராஜன், தலைவர் ஜெயராமன், தொழிலாளர்கள் சசிகுமார் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.
ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் பிறந்த தினத்தை உலக ஓமியோபதி மருத்துவ தினமாக மருத்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஓமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்தபட்டு வரும் நோய்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை கருத்தரங்குகளில் சமர்பிக்கின்றனர். நமது தமிழகம் சார்பில் வெண்புள்ளி, சேபிரியாஸில், முகவாதம் குறித்த மருத்துவ ஆராய்ச்சி கருத்துக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.
குறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோயும் மிக விரைவாக குணமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. அதே சமயத்தில் பக்கவிளைவுகள் பற்றிய கவலையும் மக்களிடையே இருக்கிறது. அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாக வேண்டும் என்ற ஆதங்கமும் உள்ளது.
இந்த சிந்தனைதான் ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடிக்க டாக்டர் சாமுவேல் ஹனிமனை தூண்டியது. டாக்டர் சாமுவேல் ஹனிமன் ஜெர்மனி நாட்டு ஆங்கில மருத்துவர், முதுகலை பட்டம் பெற்றவர். அந்தக்காலத்தில் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. நச்சுதன்மை அதிகம் இருப்பதாக கருதினார். அப்போது மலேரியா காய்ச்சல் பல இடங்களில் அதிகமாக இருந்தது.
மலேரியாவை குணப்படுத்த சின்கோனா மரத்திலிருந்து மருந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தனர். சின்கோனா பட்டைடைய உட்கொண்டால் மலேரியா காய்ச்சல் போல குளிர் காய்ச்சல் வரும் என்று கருத்தை புத்தகங்கள் மூலம் அறிந்தார். இக்கருத்தை அவரால் ஒத்து கொள்ள முடியவில்லை. இதனை எப்படி சோதிப்பது என்று தவித்தார். பிறகு தனக்கு தானே சின்கோனா பட்டையின் சாறை குடித்தார்! குளிர்காய்ச்சல் வந்தது. மருந்தை நிறுத்தியவுடன் நின்றுவிட்டது!
ஒரு நோயை எதிர்மறை மருத்துவ குறிகள் மட்டுமே குணப்படுத்தும் என்று நிலவி வந்த கருத்துக்கு முற்றுபுள்ளி வைத்தார்.டாக்டர் சாமுவேல் ஹனிமன். ஒத்த மருத்துவ குறிகளும் குணப்படுத்தும் என்ற உண்மையை உலகத்திற்கு எடுத்துரைத்தார். அதுவே ஓமியோபதி மருத்துவமாக மலர்ந்தது.அக்காலங்களில் தட்டமை, காலரா, தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். ஓமியோபதி மருத்துவ சிகிச்சையால் பலனடைந்தனர். இதனால் ஓமியோபதி மருத்துவம் புகழடைந்தது.
ஒத்த மருத்துவ குறிகளே நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் என்ற கருத்தை வெளியிட்டார். பக்கவிளைவுகள் இல்லாத மூல பொருட்களை குறைத்து வீரியப்படுத்தி மருந்துகள் தயாரித்தார். ஓமியோபதி புகழ் இங்கிலாந்து, ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் என்று பரவி புகழின் உச்சியை அடைந்தது. பல ஆங்கில மருத்துவர்கள் டாக்டர் சாமுவேல் ஹனிமனின் சீடர்கள் ஆவர்.
அமெரிக்காவில் கை கால்களில் ஏற்படும் சரும நோய்களுக்கு ‘வார்ட்ஸ்’ எனப்படும் மருந்து பலருக்கு குணம் கொடுத்தது. மக்கள் ஓமியோபதி மருத்துவர்களை “தூ டாக்டர்” என்று அழைத்து வந்தனர். இந்த மருத்துவ பலனே ஓமியோபதி மருத்துவம் சரும நோய்களுக்கு சிறந்தது என்று பெருமை தேடி தந்தது. அதோடு மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையில்லாமல் கட்டிகளை குணப்படுத்தலாம் என்ற மருத்துவ கருத்தையும் மருத்துவர்களுக்கே புரிய வைத்தது.
இதனை மையமான கருத்துகளுள் உடலில் ஏற்படும் பல்வேறு கட்டிகளுக்கு தீர்வு காண அடிகோலியது. தற்போது தைராய்டு கட்டிகள், கருமுட்டைப்பை கட்டிகள், கருப்பை கட்டிகள், மார்பக கட்டிகள் என குணமாவதை ஆதார பூர்வமாக மருத்துவர்கள் வெளியிட விதை விதைத்து எனலாம். இந்திய அரசும், மாநில அரசுகளும் சட்டரீதியான அந்தஸ்து, படிப்பு என அங்கீகாரம் அளித்தன.
ஓமியோபதி மருத்துவத்தின் தனி சிறப்பே ஒரு நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதுதான். பக்கவிளைவும் இருக்க ஒரு நோயால் பாதிக்கப்பட்ட மருந்து குறிகள் ஒத்த மருந்து குறிகள் கொண்ட மருந்துகளை அளித்து குணப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் எதிர்மறை மருத்துவ குறிகள் கொண்ட மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்காலிக நிவாரணம் விரைவாக உடனடியாக கிடைக்கும். மூலப்பொருள்களின் அளவை கட்டியும் குறித்தும் “டோஸ்களாக ஏண்டிபயாடிக்ஸ் மற்றும் வேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. நோய் கிருமிகளை அழிக்கின்றன. உடல் இயக்கங்களையும் வலி போன்ற நிவாரணங்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. நோய்களுக்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கிறது. தொடர்ந்து எடுக்கும் போது நஞ்சு தன்மையும் உடலில் விளைகிறது. சுயமான நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது.
ஒரு நோய் நிரந்தரமாக குணம் பெற ஒத்த நோய் குறிகள் கொண்ட மருந்துகளை வீரியப்படுத்தி அளிக்க வேண்டும். இம்முறை தான் ஓமியோபதி மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘முள்ளை முள்ளால் எடுப்பது, வைரத்தை வைரத்தால் எடுப்பது’ என்ற தத்துவ பொன்மொழிகள் ஹோமியோபதி மருந்தின் செயலாக்கத்திற்கு மிகவும் பொருந்தும்.
அதுவும் மூலப்பொருள்களாக கொடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், வீரியப்படுத்தும் முறையில் மருந்துகளின் மூலப்பொருளை படிப்படியாக குறைத்து அளிக்க வேண்டும். மருந்தின் சக்தி நுண்ணிய அளவில் பலம் கொண்டதாக இருக்கும். இவை நரம்புகளில் ஊடுருவி நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும். ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒரு தனிசிறப்பு உண்டு. நோய்களை பகுத்தறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அப்போதுதான் பல நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை பெற முடியும்.
டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம், தலைவர், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்.
இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இது தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் மீதான விவாதத்துக்கு மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் பதில் அளித்து பேசுகையில், “இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஓமியோபதி படிப்புகளை தொடங்கியவர்கள், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள், ஓராண்டுக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அவர்கள் அளிக்கும் பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார். #Homeopathy #LokSabha #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்