என் மலர்
நீங்கள் தேடியது "hospital vandalism"
- மருத்துவமையில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியது.
- ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையை சூறையாடினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் பிரச்சினையைத் தூண்டி விடுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுமார் 40 பேர் கொண்ட குழு திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்து, அவசர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் அறை மற்றும் மருந்துக் கடையை சேதப்படுத்தியது.
மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தியது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஜூனியர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேடையையும் சூறையாடினர்.
இதைக் கண்டித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த விவகாரத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் அரசியல் தலையீடு இருக்கிறது.
மாணவர்களோ மருத்துவர்களோ தங்கள் போராட்டங்களுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. அதற்கு பதிலாக சில அரசியல் கட்சிகள் பிரச்சனையை தூண்ட முயற்சிக்கின்றனர்.
காவல்துறையினர் இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர். மாணவர்கள் மீதும், போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீதும் எனக்கு எந்த புகாரும் இல்லை. ஆனால் சில அரசியல் கட்சிகள் பிரச்சனையை தூண்ட முயற்சி செய்கின்றன. வீடியோவை பார்த்தால் என்ன நடந்தது என்று தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.