search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Howl"

    • தஞ்சை பெரிய கோவில் வளாகத்திலிருந்து அரண்மனை வரையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
    • நாட்டுபுற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, உலக சுற்றுலா தினவிழா, தூய்மை இயக்க விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    அதன்படி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.

    இதையடுத்து பெரிய கோவில் வளாகத்தில் இருந்து அரண்மனை வரையிலான கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

    இதனை இந்தியா சுற்றுலா அமைச்சக த்தின் தென் மண்டல இயக்குனர் பாரூக்அகமது முன்னிலையில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு உலக சுற்றுலா தினம் சம்பந்தபட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    இதனை தொடர்ந்து தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டா தர்பார் மண்டபத்தில் மாணவ-மாணவிகளுக்கு தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று மாலையில் சிவகங்கை குளம், ஸ்வாட்ஸ் சர்ச், கோட்டை சுவர் மற்றும் அகழி, தேர்முட்டி, தஞ்சை நால்வர் இல்லம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி வழியாக அரண்மனை வரை பாரம்பரிய நடைபயணம் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து பெரிய கோவிலில் நடைபெற உள்ள கலாச்சார திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நாட்டுபுற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், ஒயிலாட்டம், துடும்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியா சுற்றுலா தகவல் தொடர்பு அலுவலர் ராஜ்குமார், இன்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார், நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×