என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "husband wife suicide"
நெல்லையை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 22). இவர் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி(20), என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர். இன்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை கடையும் திறக்கவில்லை. வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை செனாய் நகர் வெங்கடசலபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரது மனைவி உமா.
இவர்கள் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இந்த நிலையில் அவர்கள் இருந்த அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அறை கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது கிருஷ்ணவேல், உமா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரின் உடல்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் கடன் தொல்லையால் கிருஷ்ணவேல், உமா தற்கொலை செய்தது தெரிந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி கர்னால் தெருவைச் சேர்ந்தவர் முனிக்குமார் (வயது 40). இவர், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் நாதஸ்வர வித்வானாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மாதவி (36). இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சிராவனி (15) ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் முனிசாய் (12) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததால் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதவி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இரு மகள்களும் தூங்கி விட்டனர்.
வீட்டின் அறையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று காலை விடிந்ததும் இரு மகள்களும் பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுத இரு மகள்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவரது மகன் சந்தோசுக்கும் (வயது 33), சுகன்யா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். சந்தோஷ் சரிவர விவசாயம் செய்யாமல் அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினை ஏற்படவே அவரது தந்தை பாண்டியன், தனது பெயரில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரை விற்று கடனை அடைத்துள்ளார்.
அதன்பின் மகனுக்கு சென்னையில் மளிகைக்கடை வைத்துக்கொடுத்துள்ளார். சந்தோஷ் குடும்பத்துடன் கடையை கவனித்துக்கொள்வதற்காக சென்னை சென்றார். அங்கு அவரால் கடையை சரிவர நடத்த முடியாததால் மீண்டும் தண்டராம்பட்டுக்கு திரும்பியுள்ளார். அதன்பின் மீண்டும் தனக்கு கடன் வாங்கி தரும்படி தந்தையிடம் கேட்கவே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் வங்கி கடனில் டிராக்டர் வாங்கியுள்ளனர். அதற்கும் பணம் சரியாக கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடன் தவணையை கட்ட வேண்டும். இல்லையென்றால் டிராக்டரை ஐப்தி செய்து விடுவோம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பாகவும் தந்தை மகனிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வேதனை அடைந்த பாண்டியன் சென்னையில் வசிக்கும் மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டார். மகன் சந்தோஷ் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் மனமுடைந்த சந்தோஷ் தற்கொலை செய்யப்போவதாக மனைவி சுகன்யாவிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்