search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "I space moon"

    • ஹக்குடோ விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
    • இதற்குமுன் சந்திரனில் தனியார் நிறுவனங்களின் விண்கலங்கள் தரையிறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    டோக்கியோ:

    ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன.

    இதற்கிடையே, ஐ ஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ என்ற விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

    கடந்த மாதம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம், 100 கிலோமீட்டர் உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சந்திரனில் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன் அந்த விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தரையிறங்கிய போது அந்த விண்கலம் மோதி நொறுங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என விண்கலத்தைச் செலுத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2019-ல் இஸ்ரேலைச் சேர்ந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய போது மோதி நொறுங்கி அழிந்தது குறிப்பிடத்தக்கது.

    ×