என் மலர்
நீங்கள் தேடியது "ICC award"
- டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
- ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
மும்பை:
2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
இவர் 2022-ம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் குவித்துள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்சர்களை விளாசியுள்ளார். 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
மொத்தம் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1578 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்
- 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரை செய்தது.
- இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல் பெயரும் அடங்கும்.
துபாய்:
ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஐ.சி.சி.வழங்கி வருகிறது.
இதேபோல் ஒவ்வொரு வருடமும் இளம் வீராங்கனைகளின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு அவர்களுக்கு 'வளர்ந்து வரும் வீராங்கனை விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு 4 பேர் அடங்கிய பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
அதில் இந்தியாவைச் சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்து வீராங்கனை பிரேயா சார்ஜென்ட், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அன்னெரி டெர்க்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
- நடப்பு ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
- இந்தப் பரிந்துரைப் பட்டியலில் 2 இலங்கை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
துபாய்:
ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.
அதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் குசால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த விருதை இந்தியாவின் விராட் கோலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டில் மந்தனா, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார்.
- மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள்
ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 2012
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2013
சாரா டெய்லர் (இங்கிலாந்து) - 2014
மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 2015
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2016
ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) - 2017
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2018
எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 2019
லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) - 2021
நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) - 2022
சாமரி அதபத்து (இலங்கை) - 2023
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024
- ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
- ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் ஒருநாள் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாயை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் 3 அரைசதத்துடன் 417 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 3 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், ஜோரூட் ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இறுதியில் இந்த விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா தட்டிச் சென்றார். இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவும் இணைந்துள்ளார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் (2004), கவுதம் கம்பீர் (2009), சேவாக் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2018) ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.
- 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார்.
- அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.
அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ், பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார். அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டதில் இருந்து இலங்கை அணி பல தொடர்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.