என் மலர்
நீங்கள் தேடியது "ICC"
- நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
துபாய்:
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் கேப்டன் ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் அதிரடி காட்டியதுடன் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். அந்த தொடர் முழுவதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் 49 பந்துகளை சந்தித்து 80 ரன்களை சேர்த்து அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தார்.
நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை பாகிஸ்தான் அணி வென்றது. இதற்கு சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார்.
இதேபோன்று 20 ஓவர் உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு ஜாஸ் பட்லர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அதனால் இவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது குறித்து ஜாஸ் பட்லர் கூறியதாவது-
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற, எனக்கு வாக்கு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கிலாந்து அணி வீரர்களே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் குழுவாக இணைந்து திறமையை வெளிப்படுத்தியதால் தான் எங்களால் 20 ஓவர் உலக கோப்பை வெல்ல முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் 117 இடங்கள் கிடுகிடுவென எகிறி 37-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே ஆட்டத்தில் சதம் அடித்த இந்தியாவின் விராட் கோலி 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
- பந்துவீச்சாளர்க்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (733 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மற்றும் பெத் மூனி (766 ரேட்டிங் புள்ளி) இடம் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 6-வது இடத்திலும், ஜெமிமா 10-வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.
- டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்தது.
- சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.
துபாய்:
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார்.
2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.
- ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உள்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது இடத்துக்கு முன்னேறினார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ரஸ்ஸி வான் டெர் டசன் (தென் ஆப்பிரிக்கா ) 3வது இடத்தில் டி காக் (தென் ஆப்பிரிக்கா ) உள்ளனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் போல்ட் முதல் இடத்திலும், ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) 2வது இடத்திலும், இந்திய வீரர் சிராஜ் 3வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) முதல் இடத்திலும், முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 2 வது இடத்திலும், மெஹதி ஹசன் (வங்காளதேசம்) 3வது இடத்திலும் உள்ளனர்.
- வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
- இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (அமெரிக்கா) கிரிக்கெட்டை சேர்க்க முயற்சித்து வருகிறது.
அந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கும் டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்கு ஒலிம்பிக் போட்டியின் அமைப்பு குழுவிடம் ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுமா என்பது குறித்து வரும் அக்டோபர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
- ஐசிசி அறிவித்த அணியில் சாம் கர்ரன் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலககோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.
கடந்த வருடம் டி20 உலககோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டி20 உலககோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து அணிகளில் இருந்து தலா 1 வீரர்களும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.
ஐசிசி அறிவித்துள்ள 2022ம் ஆண்டுக்கான டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வானும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து 3வது மற்றும் 4வது வரிசையில் ஆட இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிசி அறிவித்த அணியில் சாம் கர்ரன் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி விவரம்:-
1. ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து) 2. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) 3. விராட் கோலி (இந்தியா) 4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) 5. க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து) 6. சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) 7. ஹர்த்திக் பாண்ட்யா (இந்தியா) 8. சாம் கரன் (இங்கிலாந்து) 9. வனிந்து ஹசரங்கா (இலங்கை) 10. ஹாரிஸ் ராப் (பாகிஸ்தான்) 11. ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து)
- 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் 2 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
துபாய்:
ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.
அந்த வகையில் ஐசிசி நேற்று முன்தினம் 2022-ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணியை அறிவித்தது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணியை ஐசிசி நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்துவீச்சாளர் என இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 3-வது இடத்துக்கு வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும், 4-வது இடத்துக்கு இந்திய வீரர் ஸ்ரேயஸ் அய்யரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 5-வது இடத்தில் நியூசிலாந்தின் விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேன் டாம் லதாமும், ஆல் ரவுண்டர்களாக 6-வது மற்றும் 7-வது இடத்தில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும், வங்கதேசத்தின் மஹதி ஹசன் மிராசும் உள்ளனர்.
இதையடுத்து, பந்துவீச்சாளர்களாக 7 முதல் 11 இடங்களுக்கு அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
- ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
மும்பை:
2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
இவர் 2022-ம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் குவித்துள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்சர்களை விளாசியுள்ளார். 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
மொத்தம் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1578 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்
- இந்திய அணியின் மற்றொரு வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.
- முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.
- ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும்.
- பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும்.
கராச்சி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் சமீபத்தில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தப் போட்டி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையில் விளையாட வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை.
ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும். விளைவுகளை பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள்.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்துக்குதான் அவர்கள் செல்வார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.
- ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு 2 இந்திய வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
- நியூசிலாந்தின் டேவான் கான்வேயும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் சுப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
டேவான் கான்வே கடந்த மாதத்தில் 3 சதம், 2 அரைசதம் அடித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர் இந்தியாவுக்கு எதிராகவும் மிகச்சிறப்பாக ஆடினார். அதன் மூலம் அவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார். 23 வயதான ஷுப்மன் கில் கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்ததோடு மட்டுமின்றி, இந்த பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாத காரணத்தினால் இந்திய அணியின் பந்துவீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் சிராஜ். கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய இவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.