என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iguana"

    • மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது.
    • வனத்துறையினர் உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலையில் மெயின் அருவியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு விழுந்தது. தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் பயந்துபோன பெண்கள் அலறியடித்து வெளியேறினர்.

    பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அங்கு சென்று பார்த்து, தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் 'மனிதாபிமான வழி' என்று கூறியுள்ளது.
    • முதலில் இவை தைவானுக்கு செல்லப்பிராணிகளாக கொண்டுவரப்பட்டன.

    உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது.

    தைவானின் வனவியல் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, தீவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2,00,000 பெரியவகை பச்சோந்திகள் இருக்கின்றன.

    கடந்த ஆண்டு சுமார் 70,000 பெரியவகை பச்சோந்திகளை சிறப்பு வேட்டை குழுவினர் கொன்றனர். ஒரு பச்சோந்தியை கொல்வதற்கு தலா 15 டாலர்கள் [ 1300 ரூபாய் ] அவர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல தைவான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வகை பச்சோந்திகள் வாழும் கூடுகளை இனங்காண உள்ளூர் மக்கள் உதவ வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளை தாயகமாகக் கொண்ட இவ்வகை பச்சோந்திகள் தைவானில் வேறெந்த அதிக அளவில் பெருகி, உள்ளூர் பயிர்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    தைவானில் இயற்கையாகவே வேட்டையாடும் எந்த உயிரினமும் அதிகம் இல்லாதது இந்த பச்சோந்திகளின் பெருக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.

    முதலில் இவை தைவானுக்கு செல்லப்பிராணிகளாக கொண்டுவரப்பட்டன. இவற்றை ஒரு வருடத்திற்கு மேல் கூண்டில் வைத்து பராமரிக்க முடியாது. எனவே அவை வளர்ந்த பின் , மக்கள் அவற்றை காட்டில் விட்டனர். தொடர்ந்து இவை உள்ளூர் விவசாய வயல்களையும் சுற்றுச்சூழலையும் சேதப்படுத்தத் தொடங்கின.

    இவை கூர்மையான நகங்கள் மற்றும் பற்களை கொண்டிருந்தாலும் முரட்டுத்தனம் இருக்காது. பெரும்பாலும் பழங்கள், இலைகள் மற்றும் செடிகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். பிங்டங் கவுண்டி போன்ற தைவானின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இவை அதிகம் உள்ளன.

     

    பெரியவகை பெண் பச்சோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் வரை இடும். அவை 20 ஆண்டுகள் வரை வாழும். சுமார் 5 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும். தற்போது 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்ல அரசு முடிவெடுத்துள்ள நிலையில் மீன்பிடி ஈட்டிகளைப் பயன்படுத்துவது அவற்றை கொல்ல மிகவும் 'மனிதாபிமான வழி' என்று கூறியுள்ளது.

    ×