என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "IIT Madras"
- 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தை பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து, பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.
பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது.
ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது.
கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி. மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
புதிய ஆராய்ச்சி மையத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய இளையராஜா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இரு கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை."
"மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசையப்பதாக சொன்னால் நான்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வது போல் உள்ளது," என்று தெரிவித்தார்.
- JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும்.
JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்கலாம். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "இந்தியாவின் மதிப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் வாய்பை நிறைவேற்ற, JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
லட்சக்கணக்கான சம்பளத்துடன் 11.5 லட்சம் வேலைவாய்ப்பு நிறைந்த தரவு அறிவியல்(Data Science) பட்டப்படிப்பையும், மின்னனு துறையில் தரம் வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கும் மிண்ணணு அமைப்புகள் (Electronic Systems) பட்டப்படிப்பையும் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த மாணாக்கர்களை உருவாக்க சுய கற்றல் முறையில் இணையதளம் மூலமாக படித்து, நேரடியாக தேர்வுகளை எதிர்கொண்டு 4 வருட ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்பினை பெறலாம்.
தகுதித் தேர்வின் அடிப்படையில் BS பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் படிக்கும் காலத்திலேயே வேறு ஒரு கல்லூரியில் தங்களது விருப்பமான பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே BS பட்டப்படிப்பினை பயிலலாம்.
இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும். தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள், மற்றும் கல்வித்தகுதியை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
பதிவு செய்ய : http://lnkiy.in/iitdegree
TAHDCO : https://iei.tahdco.com/iit_reg.php
மேலும் பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு
Data Science-study.itm.ac.in/ds
Electronic Systems-study atm.ac.in/es
குறிப்பு - விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே 20. 2024
tamilnaduvolunteers@gmail.com
9087293339
- பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
- மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.
ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.
பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.
- ஐஐடி சென்னையின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- புதிய ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.
தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது.
இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தான்சானியாவிற்கு சென்றிருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் உள்ள தான்சானியா தீவுக்கூட்டமான சான்சிபாரில், ஜெய்சங்கர் மற்றும் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோருக்கிடையே ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது.
இந்த வளாகம், இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துவதையும் இதன் மூலம் இந்தியா நினைவூட்டுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை அங்கீகரித்து, சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதன் மூலம், இரு தரப்பிற்கான கல்வி கூட்டுறவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஐஐடி கல்வி நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 23 இடங்களில் இயங்கி வருகிறது.
"உயர் செயல்திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்ற நாடுகளில் வளாகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்" என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
- மார்ச் மாத வாக்கில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உயிரிழந்த மாணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இரசாயன பொறியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உயிரிழந்த மாணவர் உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.
விசாரணையில் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டால், இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ்-இல் பதிவான நான்காவது தற்கொலை சம்பவமாக இது இருக்கும். முன்னதாக இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மார்ச் மாதத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான இந்த மாணவர் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இதுதவிர பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆய்வு மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
- மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது.
- மாணவருக்கு பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம்
சென்னை:
சென்னை ஐஐடி-யில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவர் அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவருக்கு அவரது படிப்பில் கவனம் செலுத்துவது மற்றும் பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடியில் ஒரு மாதத்தில் இரண்டாவது மாணவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி முதுகலை மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் தறகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி உள்ளது.
- குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
- 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.
சென்னை:
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.
அடுத்து வரும் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.
இந்நிலையில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.
ஸ்மார்ட்பாக்சர் என்ற குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பகுப்பாய்வுத் தளம், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி குத்துச்சண்டை மதிப்பீடுக்கான நான்கு முக்கிய அம்சங்களைக் கணக்கிட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும். விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும். இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்