என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IMD"

    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வட தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்திற்கு அதிக மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் 29-ந்தேதி இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதி, புதுச்சேரியில் இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகம் நோக்கி வீசும் காற்றில் மாற்றம் ஏற்பட்டு, கிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கியது. காற்றின் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள்ளது. பருவமழைக்கான சாதகமான சூழலுடன் தொடங்கியதை தொடர்ந்து தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    31 மற்றும் நவம்பர் 1-ந்தேதி தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

    வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ள அரசு அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. சென்னையில் முன்எச்சரிக்கையாக வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர். உணவு, சமையல் கூடம், தங்குமிடம், மழைநீர் தேங்கினால் அகற்ற மோட்டார் பம்ப் செட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    • தமிழகம் முழுவதும் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மழை பெய்யும்.
    • குறிப்பாக இயல்பை விட அதிக அளவில் மழை பெய்யக் கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியவுடன் தமிழகத்தில் பரவலாக கன மழை, மிக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வருகிற 10-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் பெரும்பாலும் காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

    வருகிற 10-ந்தேதி வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும். வருகிற 15-ந்தேதி உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும்.

    அப்போது தமிழகம் முழுவதும் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மழை பெய்யும். குறிப்பாக இயல்பை விட அதிக அளவில் மழை பெய்யக் கூடும்.

    இந்த மாதம் 4-வது வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ஒரு நிகழ்வு உருவாகும். இதன் மூலம் டிசம்பர் 20-ந்தேதி வரை மழை பெய்யும்.

    டிசம்பர் மாதம் 25-ந் தேதி மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகிறது. இது சிறிய புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்த புயல் கடல் பகுதியில் உருவாகும் நீராவியை மட்டும் கொண்டு வந்து மழையாக பெய்யும். டிசம்பர் மாத இறுதியில் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகும். அதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

    2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1, 2, 3-ந்தேதிகளில் காற்றழுத்தம் உருவாக உள்ளது. ஜனவரி மாதம் 3-வது வாரத்திலும் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது.

    அப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே இந்த வடகிழக்கு பருவமழை காலம் அதிக அளவில் மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இலங்கை கடற்கரையையொட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் மழைப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

    மேலும் டெல்டா மாவட்டங்கள் வட, தென் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்கிறது.

    இந்த நிலையில் இலங்கை கடற்கரையையொட்டி உள்ள தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (9-ந்தேதி) உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

    இதற்கிடையில் குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று 4 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருகிறது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் களியலில் 6 செ.மீ, மானாமதுரையில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.

    • தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் இன்று கூறியதாவது:-

    இலங்கை கடற்கரையையொட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இதற்கிடையில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    9-ந்தேதி தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். 10-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    11-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகிறது. இது நாளை முதல் 11-ந் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

    இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    11-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

    12-ந்தேதி அநேக இடங்களில் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்புள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு.

    தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதையடுத்து, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது.

    இதன் எதிரொலியால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

    இந்நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையக்கூடும் என்றும் இதனால் தமிழகத்தில் இன்று முதல் 14ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள-தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 4 நாட்களுக்கு (நாளை முதல் 17-ந்தேதி வரை) தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகபட்சமாக 17 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக திருத்தணி 13, கொடுமுடி 12, மதுராந்தகம், திண்டிவனம் தலா 11, சூளகிரி, ஆலங்காயம் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.
    • பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அனைத்தும் மாங்காட்டில் ஒன்று சேர்ந்து கலப்பதால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

    பூந்தமல்லி:

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் மழைநீர் தேங்குவதும், பின்னர் வடிவதுமாக காட்சி அளித்துக் கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் இடி மின்னலுடன் நேற்று இரவு கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, மாங்காடு அதன் சுற்று வாட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கியுள்ளது.

    மாங்காடு ஓம்சக்தி நகர், சக்கரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குன்றத்தூர்-மாங்காடு சாலை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    ஓம் சக்தி நகர் பகுதியில் கீழ்தளத்தில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களும் நாசமாகி இருக்கிறது.

    இதனால் மக்கள் தங்களது வீட்டில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மழைக்காலத்திலும் இது போன்ற பாதிப்புகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ஓம்சக்தி நகர் சந்திப்பில் உள்ள கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    குன்றத்தூர்-மாங்காடு சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் அந்த வழியாக நடந்து சென்றவர்களும் கடும் பாதிப்பை சந்தித்தனர். இன்று காலையில் இந்த சாலையை கடந்து சென்றவர்கள் உயிரை கையில் பிடித்த படியே நடந்து சென்றனர்.


    இதனால் மாங்காடு பகுதி தனி தீவு போல காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் மழை நீர் தேங்குவது ஒவ்வொரு மழைகாலத்திலும் வாடிக்கையாகவே உள்ளது என்றும், இதனால் மழைகாலம் தொடங்கி விட்டாலே நிம்மதி இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஓம் சக்தி நகர், ஜனனி நகர், சாதிக் நகர், சக்கரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    மேலும் மழை நீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் ஆங்காங்கே மின்மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினாலும் மழை நீர் சற்றும் குறைந்த பாடில்லை இந்த நிலையில் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலை, ஓம் சக்தி நகர் பகுதியில் கட்டப்பட்ட கால்வாயின் ஒரு பகுதியை ஜேசிபி எந்திரம் கொண்டு உடைத்து மழை நீரை அதிக அளவில் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஊராட்சிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் அனைத்தும் மாங்காட்டில் ஒன்று சேர்ந்து கலப்பதால் இந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

    பூந்தமல்லி நகராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகளிலிருந்து வெளியேறும் மழை நீரை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக கால்வாய் அமைத்து வெளியேற்றினால் மாங்காட்டில் அதிக அளவில் மழைநீர் தேங்குவது சற்று தவிர்க்கப்படும் என்றும் இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பெய்யும் மழையால் மாங்காடு பகுதி கடும் பாதிப்பை சந்திப்பதாகவும் பொது மக்களும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

    தற்போது இந்த பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீர் இங்கு கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களை மூழ்கடித்த படி செல்லும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குயிடிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட திருவேங்கடம் நகர், சாய்நகர், சுந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரூம் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    மேலும் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் இருப்பதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் உடனடியாக மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலுயிறுத்தியுள்ளனர்.

    பூந்தமல்லி பகுதியில் பல இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இருப்பினும் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

    அம்பத்தூர் பட்டரவாக்கம், மேனாம்பேடு, மாதனங்குப்பம் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையையொட்டியுள்ள பாலம் அருகில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

    இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போரூர் முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தீயணைப்பு வீரர்கள் படகுகள் மூலமாக மீட்டு வெளியேற்றி வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளைமேடு எம்.எம்.டி.ஏ. காலனி காமராஜ் நகர் வினோபா தெரு, ராஜேஸ்வரி தெரு, என்.ஜி.ஓ. காலனி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி, புளியந்தோப்பு, கொளத்தூர், ஜவகர் நகர், பெரியார் நகர், ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, மயிலாப்பூர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழகத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.
    • கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அதிகபட்சமாக 10.செ.மீ, திருத்தணி, காஞ்சிபுரம் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    சென்னை:

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்ததால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    எதிர்பார்த்த கனமழை, மிக கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வடதமிழகத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.

    கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் அதிகபட்சமாக 10.செ.மீ, திருத்தணி, காஞ்சிபுரம் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுமா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும்.

    ஆனாலும் தமிழகத்தில் வரும் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது.
    • தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது.

    இந்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக நேற்று மாலை மாறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றிரவு தான் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    இந்த புயல் காரைக்காலுக்கு 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு 640 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டு இருக்கிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (9-ந்தேதி) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல் தென் மேற்கு வங்க கடலில் காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலவியது.

    சென்னையை நெருங்கிவரும் இந்த புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்.

    11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி உள்பட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும்.

    சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் மழையும் பெய்தது. மாண்டஸ் புயல் நாளை சென்னையை நெருங்கக் கூடும் என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி, கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    ×