search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "immunity"

    • நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது.
    • வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பருவநிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் பலரையும் ஆட்கொள்ளும். இத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் ஆளாவதற்கு நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமாக இருப்பதும் காரணமாக அமைகிறது. அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களும் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து நோய் பாதிப்புக்கு வித்திடுகிறது. அந்த பழக்கவழக்கங்கள் பற்றியும் அவற்றை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்ப்போம்.

    ஆழ்ந்த தூக்கமின்மை

    நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தூக்கம் முக்கியமானது. தூக்கத்தின்போது உடல் சைட்டோகைன்களை உற்பத்தி செய்யும். இதுதான் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவி புரியும். போதுமான நேரமோ, ஆழ்ந்தோ தூங்காதபோது இந்த சைட்டோகைன்களின் உற்பத்தி குறையும்.

    மேலும் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் மற்றும் செல்களின் எண்ணிக்கையும் குறையும். அதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து எளிதில் நோய்த்தொற்று நெருங்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தினமும் ஆழ்ந்து தூங்குவது அவசியமானது.

    மன அழுத்தம்

    நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அதனால் ஏற்படும் அதிக மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். எனவே மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமானது.

    உணவு பழக்கம்

    கொழுப்புகள் அதிகம் கலந்திருக்கும் உணவுகள், குறிப்பாக நிறைவுற்ற கொழுப்புகளை உள்ளடக்கிய உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை பாதிக்கும். உடல் நோயை எதிர்த்துப் போராடும் திறனையும் குறைக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லதல்ல.

    நோய் எதிர்ப்புக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான ஏ, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் குறைவது உடலை பலவீனப்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பாழ்படுத்திவிடும். அதனால் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

     

    சர்க்கரை உட்கொள்ளுதல்

    அதிக சர்க்கரை கலந்திருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். புரத அழற்சியை அதிகரிக்கும். குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் சமநிலையையும் சீர்குலைக்கும். எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பலகாரங்கள், உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    வைட்டமின் டி பற்றாக்குறை

    வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்து வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் நோய்த்தொற்றுகள் எளிதில் ஆட்கொண்டுவிடும். வெளியில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடாமல் அறைக்குள் முடங்கி கிடப்பவர்களில் பலர் வைட்டமின் டி குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

    எனவே தினமும் காலையில் குறிப்பிட்ட நேரம் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் வைட்டமின் குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதித்து டாக்டர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

    ஆன்டி பயாடிக் பயன்பாடு

    பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன் படுத்துவது நல்லது என்றாலும் அதனை அதிகம் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும்.

    அடிக்கடி ஆன்டிபயாடிக் பயன்படுத்துவது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவின் சமநிலையையும் சீர்குலைக்கும். இதுதான் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டாக்டரின் பரிந்துரைக்கேற்ப அளவோடு ஆன்டிபயாடிக் மருந்து, மாத்திரைகளை உபயோகிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி இன்மை

    உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது ஆரோக்கியத்தை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கும், அவற்றின் வேலைகளை திறம்பட செய்து முடிப்பதற்கும் துணை புரியும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது போன்ற பழக்கங்கள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழி வகுக்கும்.

    சுகாதார நடைமுறைகள்

    சுகாதாரத்தை முறையாக பின்பற்றாவிட்டால் நோய்க்கிருமிகள் எளிதில் உற்பத்தியாகி நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவி நோய்களுக்கு நம்மை ஆளாக்கிவிடும்.

    • தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
    • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

    பல்வேறு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில், மழை பெய்து வருகிறது. என்னதான் மழை வெப்பத்தில் இருந்து நமக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் நோய் தொற்றுக்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

    எனவே, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் அவர்களை எளிதில் பாதிக்கலாம். இந்த பருவத்தில் சிறிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    அதேசமயம், மழைக்காலத்தில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கலாம்.

    எனவே, மழைக்காலங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    எப்படி பராமரிப்பது?

    * உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு முடிந்தவரை முழு உணவாக தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். தாயின் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    * மழைக்காலங்களில் தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெளியில் இருந்து வந்த பிறகு உங்கள் கைகளை கழுவ முயற்சிக்கவும். அதற்கு பின்னர் உங்கள் குழந்தைகளைத் தொடவும்.

    * கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முழு கை ஆடைகளையும் அணிய வேண்டும்.

    * பருவமழை காலத்தில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். கூட்ட நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    * அதேசமயம், புல் அதிகம் வளரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசுக்கடி பயம் இருக்கும்.

    * மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே, குழந்தையை எப்போதும் உலர்வாக வைக்க முயற்சி செய்யுங்கள். வலுவான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும்.

    * சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழந்தையை ஆடை அணிவதற்கு முன் லேசாக அயர்ன் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள ஈரப்பதம் நீங்கும். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி கூட ஏற்படலாம்.

    • வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது அதிசயத்தக்க நன்மைகளை அளிக்கும். அதிலும் இவை மூன்றையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், சத்தான, ஆரோக்கியமான அமுதமாக கருதப்படுகிறது.

    ஏ.பி.சி. ஜூஸ் தயாரிப்பது எப்படி?

    ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், 2 கேரட் இவைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் ஜூசரில் போட்டு விழுதாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும். அதனை அப்படியே பருக வேண்டியதுதான்.

    நன்மைகள்:

    நச்சு நீக்கம்

    ஏ.பி.சி. ஜூஸ் பருகுவதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடலாம். குறிப்பாக பீட்ரூட், இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவும்.

    செரிமானம்

    ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சீரான செரிமானத்துக்கு உதவும். கேரட், குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கும். ஏ.பி.சி ஜூஸை தவறாமல் உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    இந்த ஜூசில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பியுள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின் சி, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடி உடல் ஆற்றலை மேம்படுத்தவும் உதவி செய்யும்.

    சரும நலன்

    ஏ.பி.சி. ஜூஸில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் பளபளப்பை தக்கவைக்க உதவி புரியும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சரும திசுக்களை சரி செய்ய உதவும்.

    சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கும். அத்துடன் இந்த ஜூஸில் இருக்கும் நச்சு நீக்கும் பண்புகள் முகப்பரு மற்றும் சருமம் சார்ந்த பிற பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    உடல் ஆற்றல்

    பீட்ரூட் ரத்த ஓட்டத்தையும், தசைகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தையும் துரிதப்படுத்த உதவி புரியும். உடல் செயல்திறனையும் மேம்படுத்தும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் உள்ள இயற்கை சர்க்கரைகளும் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

    இதய ஆரோக்கியம்

    ஏ.பி.சி. ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்களிக்கும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதேவேளையில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். கேரட் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

    எடை மேலாண்மை

    ஏ.பி.சி. ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கும், உடல் எடையை சீராக நிர்வகிப்பதற்கும் இது சரியான தேர்வாக அமையும். நொறுக்குத்தீனிகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் ஆர்வத்தைக் குறைத்து, நீண்ட நேரம் பசி உணர்வு இன்றி வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் வழிவகை செய்யும்.

    • பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
    • ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

    தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். 

    தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

    இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

    நோய் எதிர்ப்பு சக்தி:

    தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.

    சக்தி தரும்:

    மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

    ஜீரண சக்திக்கு:

    உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த பயன் தரும் .

    மேலும் இதிலுள்ள மினரல் மற்றும் வைட்டமின்கள் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.


    சர்க்கரை வியாதிக்கு:

    தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

    இதயம்:

    இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

    தைராய்டு:

    நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

    உடல் எடை:

    உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.


    சிறுநீரகம்:

    சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறு நீரகத்தை பெறலாம்.

    முதுமை:

    தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவிடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

    • நெல்லிக்காய் கண் ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம், மூட்டு வலி போன்றவற்றிற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
    • இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும்.

    நெல்லிக்காய் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன.

    நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

    நெல்லிக்காய் கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும்.

    நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

    நெல்லிக்காய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவும். தலைமுடியை பலப்படுத்தவும், பளபளப்பாகவும் வைத்திருக்கவும் இது உதவுகிறது.

    நெல்லிக்காய் கண் ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம், மூட்டு வலி போன்றவற்றிற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.

    நெல்லிக்காய் ஜூஸ் அதிக அளவு உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

    • சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.
    • ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.

    ரோஜா என்றாலே பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதில் மருத்துவ குணங்கள் இருக்கு என்றால் எல்லோருக்கும் பிடிக்காமல் போகுமா என்ன? ரோஜா இதழ்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும் வண்ணங்களிலும் இருக்கிறது. இதில் மருத்துவ குணங்களை இப்போது பார்ப்போம்.

    ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும். மேலும், உடல் எப்போதும் சோம்பேறியாகவும் மந்தமாகவும் இருக்கும். எனவே, அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை ஈட்டு பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்ததாக பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.

    ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

    • தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
    • தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும்.

    * தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது.

    * தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று ஸ்பூன் எடுத்து ஆறிய சுடுதண்ணிரில் கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

    * தேனுடன் வெங்காய சாறை கலந்து சாப்பிட்டு வர இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது, இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது.

    * எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி சரியாகும்.

    * கண்பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    * தேனுடன் முட்டை மற்றும் பாலை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்

    * உடல் ஆரோக்கியத்திற்கு தேன் மிகவும் நல்லது. தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

    * இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

    * தேனையும் மாதுளை ஜூசையும் சம அளவு சேர்த்து தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

    * உடம்பில் ரத்தக் குறைவு அல்லது ரத்தசோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் நீங்கும்.

    * தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.

    * மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

    * கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

    * வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்கு தொப்புளை சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

    * தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

    * ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த சுத்திகரிப்பும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

    * அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

    * முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

    * தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டு சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

    * ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்னர் அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

    * குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம்பெறும். புதிய ரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

    நெல்லிக்காய்களை துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

    * என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

    * சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன் தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

    * நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களை தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

    * மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன் தான். வலி உள்ள இடத்தில் நன்றாக தேனை தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்கும்.

    * படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

    * கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகை தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு. ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளில் இருந்து விடுபட தினமும் தேனை பருகி வரவேண்டும்.

    தேன் நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல ரத்த விருத்தி ஏற்படும்.

    ஒரு ஸ்பூன் தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதம் உள்ளது.
    • நோய் எதிர்ப்பாற்றலை கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது.

    தாய்மார்களுக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை ஒரு நாளைக்கு தாய்ப்பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. பருமனானவர், ஒல்லியானவர் என்றெல்லாம் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தாய்மார்களாலும் இந்த அளவுக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதமான லாக்டால்புமின் (lactalbumin) தாய்ப்பாலில் உள்ளது. இது மாட்டுப்பால் போன்ற பிற மாற்றுப் பொருட்களில் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிற, மற்றும் நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிற வல்லமை தாய்ப்பாலில் உள்ளது. தாய்ப்பால் குடிக்கும்போது மட்டுமே குழந்தையின் நாக்கு, வாய் போன்றவை அசைந்து வேலை செய்கின்றன.

    புட்டிப்பாலை பயன்படுத்தும்போது, அது குழந்தைகளின் எதிர்ப்பாற்றலையும் அசைவையும் குறைத்துவிடும். திரும்பவும் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்க மறுக்கும். மார்பகத்தில் இருந்து நேராக பால் புகட்டும்போது தாய்க்கும் சேய்க்குமான அன்பு உறவு வளரும். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உணரும்.

     தாய்ப்பாலைத் தவிர மற்ற பொருள்கள் குழந்தையின் சிறுநீரகத்துக்கு பாதிப்பானது என்பது உண்மையா?

    தாய்ப்பாலைத் தவிர பிற மாற்றுப் பொருட்களையும் குழந்தையால் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் மாட்டுப்பால் போன்ற மாற்றுப்பொருட்களில் உள்ள உப்புச்சத்துகள், ஸ்டார்ச் போன்றவை குழந்தைகளின் இளம் சிறுநீரகத்துக்கு பாரமே. இதனால் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவேதான் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மாடுகள் பாலுக்காக வளர்க்கப்படுவதற்கு முன்னர், தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு முதன்மையான உட்பொருளாக இருந்தது. மனிதகுலம் அழியாது வளர்வதற்கு தாய்ப்பால் முக்கியக் காரணமாக உள்ளது. பிற பொருட்களைக் கொடுத்தால் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் சர்க்கரைத்தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது சரியா?

    சர்க்கரைத் தண்ணீர், இனிப்பு போன்றவற்றை கொடுப்பது மிகவும் தவறு. அதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ கூடாது. இதுகுறித்து சரியான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் வேண்டும். சர்க்கரைத் தண்ணீரைக் கொடுத்தால் குழந்தைகளின் வயிறு நிறைந்து விடும், பசி ஏற்படாது. பசி இருந்தால்தான் குழந்தைகள் மார்பை பிடித்து சப்பிக் குடிக்கும். குழந்தைகள் பசி எடுத்து சப்புவதுதான் தாய்ப்பால் புகட்டலின் முக்கியமான பகுதி.

    மேலும் தாய்ப்பால் புகட்டுவது தனிமனித செயல்பாடு அல்ல, சமூகச் செயல்பாடு. இதனால் குழந்தைகளின் நலம் உந்தப்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் சேமிக்கப்படுகிறது. தாய்ப்பாலுக்கு மாற்றுப்பொருள் உற்பத்தி செய்தால் ஒரு நாளைக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி என்பது, பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பால் இவற்றில் இருந்து காத்து குழந்தைகளின் நலனை உறுதி செய்கிறது.

    • உடலில் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ என்ற தற்காப்பு படை உள்ளது.
    • நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, `இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. கோடிக்கணக்கான நுண்கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

    மனித உடலில் 'தடுப்பாற்றல் மண்டலம்' என்ற தற்காப்புப் படை உள்ளது. இதுதான் நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது. நாம் நடந்தாலும், ஓடினாலும், அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், உறங்கினாலும் 24 மணி நேரமும் இடையறாது நம்மைக் காவல் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'தலைமையகம்'.

    ரத்த வெள்ளை அணுக்கள்தான் போர் தளபதிகள். டி அணுக்கள், பி அணுக்கள், 'மேக்ரோபேஜ்' அணுக்கள், 'எதிர் அணுக்கள்' என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் போர் தளபதியின் கீழ் இயங்கும் படையில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். ரத்தக்குழாய்களும், ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.

    கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளுடன்தான் யுத்தம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும். இந்த 'எதிரிகள்' நம் உடலுக்குள் நுழையும்போது, அவர்களை தடுக்க ரத்த வெள்ளை அணுக்கள் கட்டளையிடுகின்றன.

    அதை ஏற்று, சிப்பாய் படை எதிரிகளைக் கொல்கின்றன. சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தை துப்புரவு செய்கின்றன.

    இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்பதை வேவு பார்க்க உளவாளிகளும் உண்டு. இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப்படை. இதற்கு 'நோய் எதிர்ப்பு சக்தி' அல்லது `நோய்த் தடுப்பாற்றல்' என்று பெயர்.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது.

    செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தடுப்பு மருந்துகள் தருவது. ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

    தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலம் வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்' உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.

    • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

    செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையானபொருட்கள்:

    செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,

    தண்ணீர் 1 கப் – 150 மி.லி,

    நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.

    செய்முறை:

    பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

    மற்றொருமுறை:

    ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.

    பலன்கள்

    * மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.

    சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

    செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

    * தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

    செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.

    * பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.

    * கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    • குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும்.
    • எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது.

    கோடை டை காலத்தில் பருவதற்கு சிறந்த பானமாக கருதப்படும் இளநீரை குளிர் காலத்திலும் ருசிக்கலாம். ஏனெனில் அதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பியுள்ளன. குளிர்கால நிலைக்கு ஏற்ப உடலை மேம்படுத்தவும், புத்துணர்ச்சியூட்டவும்உதவுகிறது. குளிர் காலத்தில் ஏன் இளநீர் பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

    நீரேற்றம்

    குளிர்காலத்தில் காற்று உலர் தன்மை கொண்டிருக்கும். கோடை காலத்தை போல தாகத்தை உணர முடியாது. பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோ லைட்டுகளை வழங்கும் பானமாக இளநீர் விளங்குகிறது. இயற்கையாகவே உடல் நீரேற்றமாக இருக்க வழிவகை செய்கிறது.

    எலக்ட்ரோலைட்

    குளிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் அல்லது உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நீரிழப்பு ஏற்படும். எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். இளநீர் இயற்கையாகவே எலக்ட்ரோலைட்டுகளை கொண்டது. உடல் செயல்பாடுகளின் போது வியர்வை மூலம் இழக்கப்படும் திரவங்கள் மற்றும் தாதுக்களை நிரப்புவதற்கு இளநீர் சிறந்த தேர்வாக அமையும்.

    வெப்பநிலை

    குளிர்காலத்தில் உடல் வெப்பநிலையை சீராக பராமரிப்பது முக்கியம். இளநீர் உடல் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள் ளும். குளிர்ந்த ர்ந்த காலநிலையில் உடல் வெப்ப நிலையை சமநிலையில் பேணுவதற்கு வித்திடும்.

    ஆற்றல்

    இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. அவை குளிர்பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக விளங்குகின்றன. குளிர்காலங்களில் ஆட்கொள்ளும் சோர்வு மற்றும் சோம்பலை எதிர்த்து போராடும் பணியை இளநீர் மேற்கொள்ளும். உடலுக்கு விரைவான ஆற்றலையும், சக்தியையும் அளிக்கும்.

    ஊட்டச்சத்துக்கள்

    வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ்) மற்றும் தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம்) உள்ளிட்ட முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இளநீரில் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும். குளிர் காலங்களில் நோய் தாக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ப உடலுக்கு சக்தியை வழங்கும் பயனுள்ள பணியை இளநீர் செய்யும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    சளி மற்றும் காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை தடுக்க வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு அவசியம். இளநீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

    செரிமானம்

    குளிர்காலத்தில் விரும்பிய உணவுகளை பலரும் அதிகமாக சாப்பிட்டு விடுவார்கள். பிறகு செரிமான தொந்தரவுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். இளநீர் உணவு துகள்களை உடைத்து செரிமான செயல்பாடுகளை துரிதப்படுத்தி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    ×