search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "impact of heat"

    • வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி திறக்கவில்லை.
    • ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசிய காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். 

    இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த காரணத்தினால் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தமிழக முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 1200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

    இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்க ளிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன ங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது.

    பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதையும் காணமுடி ந்தது. கடலூரில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களு க்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.

    ×