search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Impaired"

    • ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் தலைவர் மோகன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்தி றனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளனர்.

    ×